அரட்டை அரங்கம் விசு.. மறக்க முடியாத மீனாட்சிசுந்தரம் ராமஸ்வாமி விஸ்வநாதன்!

Su.tha Arivalagan
Oct 10, 2026,10:30 AM IST

- பாரதிராஜன்


01/07/1945 ல் பிறந்த மீனாட்சிசுந்தரம் ராமஸ்வாமி விஸ்வநாதன் என்கிற விசு, நடிகர், திரைப்பட எழுத்தாளர், சினிமா இயக்குநர், டெலிவிஷனில் நிகழ்ச்சி நடத்தியவர் எனபன்முகம் கொண்டவர்.  ஒய்ஜி பார்த்தசாரதி குழுவில் நாடக நடிகராக வாழ்க்கையை துவக்கினார். 


தொடர்ந்து இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் படங்களான பட்டினபிரவேசம், [1977ல் டெல்லி கனேஷ் அறிமுகமான சினிமா], அவன் அவள் அது [1981திருமதிசிவசங்கரிகதை], நெற்றிக்கண் [1981 ரஜினி இரட்டைவேடம்], தில்லுமுல்லு. இந்த படங்களுக்கு வசனம் எழுதியவர். இதில் தில்லுமுல்லுவில் சிறிய வேடம்.


இவரை சென்னை நாடக சபாக்களில் சந்தித்து பேசி இருக்கிறேன். நான் ஈரோட்டில் பணிபுரிந்த காலத்தில் ஒரு ஞாயிறு இரவு ஏற்காடு எக்ஸ்பிரஸில் விசு நாடக குழுவைப்பார்த்து டிரெயினில் பேசிக்கொண்டே வந்தேன். 


திங்கள், செவ்வாய் இரண்டு நாட்கள் நாடகம் முதலில் மோடிமஸ்தான் நாடகம். இந்த நாடகம்தான் பின்னாளில், மணல்கயிறு என்ற பெயரில் சினிமாவானது.




விசுவின் சினிமா க்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அதன் தீர்வுதான் பிரதானமாக இருக்கும். மணல்கயிறு, டெளரி கல்யாணம், சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, வேடிக்கை என்வாடிக்கை, பெண்மணி அவள்கண்மணி, பட்டுக்கோட்டை பெரியப்பா போன்ற படங்கள் அதற்கு உதாரணம்.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய அழைப்பின் பேரில்  மது ஒழிப்பு பற்றிய படமான நீங்க நல்லா இருக்கணும் தேசிய விருது பெற்றது. நடிகர் ரஜினியுடன்  நல்லவனுக்கு நல்லவன், மன்னன், அருணாச்சலம், உழைப்பாளி. இதில் மன்னன் படம் & அருணாச்சலம் பயங்கர ஹிட் .


சன்டிவியில் அரட்டை அரங்கம் மூலமாக மக்கள் மனதைகொள்ளை கொண்டவர். குடும்பம் ஒரு கதம்பம் சினிமாவில் பயங்கர காமெடியாக நடித்தவர். கொரானா காலத்தில் 2020ல் காலமானார்.


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன், பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)