- பாரதிராஜன்
மறைந்த பாலமுரளி கிருஷ்ணா பற்றிய நினைவலைகள். 1930 ஜூலை 6-ல் ஆந்திராவில் பிறந்த ஒரு குழந்தை, 8 வயதில் மேடை ஏறியது. 15 வயதில் 72 மேளகர்த்தா ராகங்களையும் கரைத்துக் குடித்தது. அந்த குழந்தைதான் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா.
அவர் ஒரு பாடகர் மட்டுமல்ல. பாடகர், வாக்கேயக்காரர், வயலின் வித்துவான், மிருதங்க வித்துவான், கஞ்சிரா கலைஞர். புதிய ராகங்களை படைத்தவர். மகதி, லவங்கி, சுமுகம், கணபதி போன்ற 400-க்கும் மேற்பட்ட ராகங்களை உருவாக்கியவர். "எனக்கு தெரிந்த ராகம் 400, எனக்கு தெரியாத ராகம் 4000" என்று அடக்கமாக சொன்னவர்.
கர்நாடக சங்கீதத்தை கோவில்களில் இருந்து உலக அரங்குகளுக்கு கொண்டு சென்றவர். பத்ம விபூஷண், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது, என எத்தனையோ விருதுகள் அவரை தேடி வந்தாலும், கடைசி வரை ஒரு குழந்தையைப் போலவே இருந்தார்.

திருவிளையாடல் சினிமா பார்த்தவர்கள் அந்த படம் பற்றிய நினைவுகளில் சில தருமிவேடம் போட்ட நாகேஷ் வசனம், சிவாஜி கடற்கரையில் நடந்து வருவது. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக பாலையா அவர்களுக்கு பிண்ணணி பாடிய ஒரு நாள்போதுமா பாடல். மறக்க முடியாத நினைவுகள். பாலமுரளி அவர்கள் முதன்முதலில் நடித்த படம் பக்த பிரகலாதா அதில் நாரதர் வேடம். இந்த படம் நான் ஆற்காட்டில் உள்ள ஒரு தியேட்டரில் பார்த்திருக்கிறேன்.
இசைஞானிஇளையராஜா இசையில் சின்னக்கண்ணன் அழைக்கிறான். தங்கரதம் வந்தது, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இவரை எப்போது சந்தித்தேன். வழக்கமாக டிசம்பர் மாத கச்சேரிகளில் இவரை சந்திக்க எபபடி முடியும்? ஒருவருட டிசம்பர் கச்சேரிக்கு விஐபி பாஸ் கிடைக்க பாலமுரளி கச்சேரி மியூசிக் அகாதமி என்ற விவரம் தெரிந்து நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் நான் ஆஜரானேன்.
நிகழ்ச்சி முடிய இரவு 9/30மணி அதன்பிறகு கூட்டத்தில் நெருங்கி அவரைப்பார்த்து பேசி வழக்கமாக ஆட்டோகிராப் வாங்கி வீட்டுக்கு வந்தேன். அதைப் பொக்கிஷமாக பாதுகாத்து வந்தேன். வீடு மாறி மாறிவந்த போது ஆட்டோகிராப் காணாமல் போனது வருத்தமே என்ன செய்ய?
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
பிரியாவிடை!
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் இன்று விருந்தளிப்பு
உலகத்தில் சிறந்த பூ எது?
பாலமுரளி கிருஷ்ணா.. ஒரு நாள் போதுமா?
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
அதீத அன்பு.. ஒரு நிமிடக் கதை (30)
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
{{comments.comment}}