கள்ளம் கபடமற்ற அன்பு!

Nov 23, 2026,10:20 AM IST

- "சொல்லருவி" ரஞ்சிதா மணியரசன்


அன்று ஒருநாள் பலத்த மழை சாயங்காலம் மணி நான்கைத் தாண்டியிருக்கும். எளிய சேலை உடுத்திய 26 வயது குயில் அடுப்பை பற்றவைத்துக்கொண்டிருந்தாள் ...விறகு அடுப்பை மழை எதிர்பாராத விதமாய் வந்ததால்.. என்ன செய்றதுனு தெரியாம..


கொஞ்சம் பாதி நனைந்த விறகுகளை எடுத்து பற்றவைக்க முயற்சி செய்துகொண்டிருந்தாள். ஒரே பதட்டம். சீக்கிரமா சோறு வடிச்சி கொழம்பு வச்சிரனும்னு வேலைய சுறுசுறுப்பா செய்தா....அந்த மனுசன் பசியோட வரும் என்ன பண்றது மழைவேற கொட்டிக்கிட்டே இருக்கு திட்டிகிட்டே..குயிலு சமைக்கிறா.... 


விறகடிப்பின் புகை அந்த மாலை நேர மழையில கூரைக்குள்ள இருந்து... ஒய்யார நடைப்போட்டு வளைந்து, நெளிந்து  ஓலையில் துவாரத்தில் வெளிப்பட்டது. அதைப் பார்ப்பதற்கு வானத்துக்கும் கூரை க்கும் ஒரு அருவி மாதிரி இருந்தது...




அப்போது மாறன் வந்தான்.....குயிலு குயிலு வெளியில நல்ல மழைடி என்ன பண்றவ வீட்ல அப்டினு கேக்க தூக்கில் தொங்க விட்டிருந்த துண்டினை எடுத்து .. வா புள்ள இந்தா இத சாப்டுனு ஒரு பொட்டலத்தை நீட்டினான்.. பிரித்து பார்த்தா முகமெல்லாம் சிரிப்பு..  சூடா வெங்காய பக்கோடா... அவள் எடுத்து அவனுக்கு நீட்ட இல்ல குயிலு நீ சாப்டு உனக்காகத்தான் வாங்கிட்டு வந்தேன்..


அவள் சிரிச்ச மூஞ்சிய பார்த்து தானும் சிரித்தான்... சட்டுனு குயிலு ஐயோ! மாமா.. ஒனக்கு பசிக்கும் இரு ஒரு காமணி நேரத்துல சமச்சிடுறேனு சொன்னா... சரிகுயிலு!


சின்ன குடிசை ஒரே ஒரு அறை...எதிர்ப்பார்ப்பில்லாத அழகான அன்பு இவற்றையெல்லாம் ரசிக்கும் தென்னை மரமும், வேப்ப மரமும், சிறு முருங்கைக்கன்றும், கீரைகளும் கருவேப்பிலை மரமும், மருதாணியும் நனைந்த விறகும், அடுப்பும், தண்ணீர்த்தொட்டியும், கதவும், ஒற்றைச்சன்னலும் ஒளிந்திருந்து பார்க்கும் நாமும் வியந்துதான் போகிறோம்.


"மழை கூடவே... மெல்லிய இசையாய் அழகாய் பரிமாறி, அன்பாய் குயிலும் மாறனும் குற்றமில்லா காதலில் கரைவதைப் பார்த்து...!"


(ரஞ்சிதா மணியரசன், M.A.,B.Ed..,Eng, கவிஞர், ஆசிரியர் என பன்முகம் கொண்ட படைப்பாளி, நாமக்கல்லைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்