வெம்பாக்கம் வி.எஸ்.ராகவன்.. மறக்க முடியாத அல்ட்டிமேட் ஸ்டார்!

Oct 07, 2026,04:30 PM IST

- பாரதிராஜன்


நடிகர் வி.எஸ். ராகவன்.. வெம்பாக்கம் கிராமத்தில் பிறந்து, கிராம பள்ளிக்கூடம் தொடர்ந்து  சென்னை மயிலாப்பூர் வாசம். பி.எஸ். பள்ளிக்கூட மாணவன். பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரி பட்டதாரி. தந்தை மறைந்த பிறகு புரசைவாக்கம் வாசம். 


ஆரம்பித்தில் துமிலன் என்கிற என். ராமசாமி அவருடைய மாலதி பத்திரிகையில் துணை ஆசிரியர். பிறகு ஐஎன்ஏ என்ற பெயரில் மாலிக வாதிராஜ், நடராஜ் மற்றும் கே.பாலச்சந்தர் உள்பட டிராமா கம்பெனி ஆரம்பம். 


ராகவன் சினிமாவுக்கு வந்ததும் நாடக சபா நடக்கவில்லை. சுமார் 1000படங்களுக்கு மேல் நடித்தவர். சிறந்த குணசித்திர நடிகர். பல்லாண்டு வாழ்க, பட்டணத்தில் பூதம் படங்களில் வில்லன். சிவாஜி படங்களான வசந்த மாளிகை, சவாலே சமாளி,உயர்ந்த மனிதன்.பாலச்சந்தர் படங்களான இருகோடுகள் அருமையான வேடம்.


இவரை  தி.நகர் கிருஷ்ண கானசபா வில் நாடகத்திற்கு தலைமை தாங்க வந்தபோது பார்த்து பேசினேன். தவிர 1970 முதல் 1980வரை நிறைய சபாக்களில் வாலண்டியர் வேலை அதில் சினிமா நடிகர்கள் வந்தால் பார்த்து பேசுவேன். ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிறைய முறை ராகவன் சாரைப்பார்த்து பேசியதுண்டு. 




பல்லாண்டு வாழ்க படம் பார்த்து அவருடைய வில்லன் வேடத்தை பார்த்து அசந்து போனேன். அதன் பிறகு ஒரு நிகழ்வில் அதைப்பற்றி பேசினேன். அதற்கு அவர் சொன்ன பதில் தம்பி சினிமாவில் எனக்கு கொடுத்த வேடம். அதனை நீ பின்பற்றாதே என அறிவுரை கூறினார்.


டெலிவிஷன் சீரியலிலும் நடித்தவர். மறக்க முடியாத குணசித்திர நடிகர். 


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு

news

மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?

news

பாட்டியானாலும் பிரச்சினை!

news

"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!

news

புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!

news

நான் கம்ப்யூட்டர் கற்ற கதை

news

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.. அப்படீன்னா அர்த்தம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்