அதுல பாருங்க.. மறக்க முடியாத நடிகர்.. வி.கே.ராமசாமி!

Oct 02, 2026,11:08 AM IST

- பாரதிராஜன்


மறைந்த நடிகர்களில் மறக்க முடியாத முக்கியமான நடிகர் வி.கே.ராமசாமி. ஹீரோவாக இவர் நடித்ததை விட ஹீரோ வயதிலேய வயதானவராக நடித்த படங்கள் அதிகம். கேரக்டர் ரோலுக்காக அளவெடுத்து தைத்தது போல இருந்தது இவர் நடித்த படங்களில் இவர் தாங்கிய பாத்திரங்கள்.


அக்டோப்ர 1ம் தேதி 1926ம் ஆண்டுதான் வி.கே.ராமசாமியும் பிறந்தார். நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டிய நடிகர் திரு.வி.கே.ஆர். அவர்கள் 500படங்களுக்கு மேல் தன் நடிப்புத்திறமையைக் காட்டியவர். டி.ஆர். மகாலிங்கம், எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ் எஸ் ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல், ரஜினி வரை நடித்தவர். கார்த்திக் , பிரபு வரைக்கும் கூட நடித்துக் கலக்கியவர்.


21வயதில் 60வயது வேடத்தில் நாம் இருவர் படத்தில் கலக்கியவர். 1970ல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார். வீரபாண்டிய கட்டபொம்மனில் எட்டப்பன் வேடம். ராஜபார்ட் ரங்கதுரை யில் நாடக நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்கும் ஆசான், கெளரவம் படத்தில் இன்று மாலை கதாகாலட்சேபம், அனைவரும் வருக சுண்டல் உண்டு. உயர்ந்த மனிதனில் வில்லனாக வேடம். மனேரமாவோடு போட்டிப்போட்டு நடிப்பார்  




தங்கபதக்கம் படத்தில் ஸ்ரீகாந்த் வாங்கிக்கொடுத்த மாதிரி பொருட்கள் வாங்கி விஜயாவிடம் கொடுப்பது. சங்கே முழங்கு சினிமாவில் வக்கீல் வேடம். எம்ஜிஆர் கேள்விகளால் இவரை துளைத்தெடுப்பார். வேலைக்காரன் படத்தில் ரஜினியை கலாய்ப்பது. கல்யாண ராமன் படத்தில் கமலுக்கு பாடல் சொல்லிக்கொடுப்பது.


அதேபோல அக்னி நட்சத்திரம் படத்தில் இவரும் ஜனகராஜும் சேர்ந்து செய்த காமடியை மறக்க முடியுமா.   

இவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சிவாஜி தலைவராக இருந்த போது பொறுப்பில் இருந்தவர். மன்னன் படத்தில் குஷ்புவின் அப்பா வேடம். வசந்த மாளிகையில் சமையல்காரராக பிச்சி உதறி இருப்பார். குணசித்திர நடிகர். சினிமா தயாரிப்பாளரும் கூட.


சிறப்பான கலைஞராக வலம் வந்த வி.கே.ராமசாமியின் இடத்தை இதுவரை யாரும் நிரப்பவில்லை என்பதே உண்மை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்