வாழ வேண்டிய வயதில்

Nov 23, 2026,11:25 AM IST

- வ.ஸ்ரீ.நித்தியாஸ்ரீ


குதித்து வாழ வேண்டிய வயதில்,

குதிரையைப் பிடிக்க ஏன் ஓட வேண்டும்?


மகிழ்ச்சியாய்ச் சிரிக்க வேண்டிய வயதில்,

மனதில் பாரம் ஏன் போட வேண்டும்?


சிகரம் தொட வேண்டிய நேரத்தில்,

சிதைந்து ஏன் போக வேண்டும்?


சந்தோஷமாக இருக்க வேண்டிய வயதில்,

சாதனைகளைப் பற்றி ஏன் யோசிக்க வேண்டும்?


நகைச்சுவையாக எடுத்துக்க வேண்டிய விஷயத்தை,

நாடகமாக ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?




கனவுகள் காண வேண்டிய வயதில்,

கவலைகள் ஏன் இருக்க வேண்டும்?


தாண்டி விளையாட வேண்டிய வயதில்,

தண்டனைகளை ஏன் அனுபவிக்க வேண்டும்?


குயில்கள் போல கூவும் வயதில்,

குறைகளை ஏன் காண வேண்டும்?


நீச்சல் அடிக்க வேண்டிய வயதில்,

நினைவுகளில் ஏன் வாழ வேண்டும்?


ஆனந்தமாக இருக்க வேண்டிய வயதில்,

ஆழத்தில் ஏன் விழ வேண்டும்?


(வ. ஸ்ரீ. நித்தியாஸ்ரீ, 8ஆம் வகுப்பு படிக்கிறார். ஜான் டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி, கடலூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்