நேரு மாமா!
- கலைவாணி ராமு, புதுச்சேரி
வெள்ளை உள்ளம் கொண்டவராம்.....
குழந்தைகளுக்கு எல்லாம் மாமாவாம்....
குடி மக்களின் நலன் விரும்பியுமாய்....
பல பரி மானங்களில் தன்னை நிரூபித்தும்,
வாழ்ந்த....அல்ல அல்ல, நம் உணர்வில் இன்றும் வாழ்ந்து வரும்
நம்ம நேரு மாமா..
நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும்...
முதல் பெண் பிரதமரின் தந்தையுமாய்.... நம் மனதை கவர்ந்தவரும்.....
மலர்களை நேசிக்கும் மாசற்றவரும்...
குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவரும்.....
உலக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவரும்....
காந்தியுடன் இனைந்து அகிம்சை வழியில் விடுதலைக்கு பாடுபட்டவரும்....
அப்பா பெயரோ மோதிலால் நேரு....
மனைவி பெயரே கமலா நேரு...
அவர் சட்டம் படித்து வக்கீலும் ஆனாரு....
சுதந்திர இந்தியாவில் ஐந்தாண்டு திட்டத்தையும் தீட்டினாரு......
அழகான வெள்ளை ஆடையை
உடுத்துவாரு.....
தன் தலைமுறையை நாட்டுக்கா அர்ப்பணித்தாரு....
உங்க மாமா வேறு....
எங்க மாமா வேறு......
ஆனால் நம் எல்லோராலும் மாமா என அழைக்கப்பட்டாரு......
அவரின் பிறந்த நாளை
குழந்தைகள் தினமாக கொண்டாட சொன்னாரு.....
நம்ம நேருவை போற்றி
கொண்டாடுவோம் இத் திருநாளில்.