கோலமயிலே!

Su.tha Arivalagan
Jan 16, 2026,04:22 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


மானே

நீ போட்டதால் 

பூக்கோலம் ஆனதடி

உன் மாக்கோலம் !!!!!


கண்ணே 

நீ வரைந்ததால்

உயிர் பெற்று வந்ததடி உன் மயில் கோலம்!!!!!


பெண்ணே 

நீ‌ தொட்டதால் வாசம்

வீசிப் போனதடி

உன் வாசல் கோலம்!!!!!




அழகே

நீ புள்ளி வைத்ததால்

கண்ணசைத்து புன்னகைத்தது

உன் பூசணிப்பூக் கோலம் 


பூவே 

நீ ரசித்ததால் 

சிரிக்குதடி சிங்காரி 

உன் ரங்கோலிக் கோலம்


மார்கழியும் மயங்கிடுதே

மங்கை உன் கோலத்திலே!!!!!!!

மயங்கிய வேகத்தில்

தையும் தானே பிறந்ததே!


கோலமயிலே

அடுத்த ஜென்மத்திலாவது

கோலமாவாய் நான் பிறக்க வேண்டும்!!!!????


உன் கைகளில் கொஞ்சி விளையாட வேண்டும்!!!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).