வானத்தில் கார்மேகமாய் நீயே.. கண்ணா!!!
Sep 24, 2025,04:29 PM IST
- தீபா ராமானுஜம்
வானத்தில் கார்மேகமாய் நீயே !!
வண்ண மலர்களின் வாசனையாய் நீயே !!
மண்ணில் விழுகின்ற தூறல்களாய் நீயே !!
மழலையின் மனம் கவரும்
புன்னகையாய் நீயே !!
சில்லென்று தீண்டிடும் தென்றலாய் நீயே !!
புல்லாங்குழலின் நாதமாய் நீயே !!
கண்களில் காணும் காட்சியும் நீயே !!
காதினில் கேட்கும் இன்னிசை நீயே !!
மனதில் தோன்றும் உணர்வுகள் நீயே !!
மகிழ்வான வாழ்வின் தருணங்கள் நீயே !!
உள்ளத்தின் உள்ளே இருப்பவனும் நீயே !!
துன்பத்தில் மருந்தாக ஆனவனும் நீயே !!
எங்கும் நீயே எதிலும் நீயே !!
என்னுயிரில் இன்னுயிராய் கலந்தவனும் நீயே !!