- ஸ்வர்ணலட்சுமி
திருமாலின் திருமார்பில் நீங்காத இடம் பெறும் பாக்கியம் துளசிக்கு உண்டு . தெய்வீக தன்மை நிறைந்த துளசி திருமகளின் அம்சமாகும். துளசி இலையின் நுனியில் நான்முகனான பிரம்மாவும்,மத்தி பகுதியில் திருமாலும், அடிப்பகுதியில் சிவனும், மற்றைய பகுதிகளில் 12 ஆதித்யர்களும்,11 ருத்திரர்களும்,8 வசுக்களும்,இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
துளசிக்கு "பிருந்தை " என்ற பெயரும் உண்டு. அதனோடு "விஷ்ணுபிரியா" "ஹரிப்பிரியா "என்ற பெயர்களும் துளசிக்கு உரியவையே ஆகும். வைணவ திருத்தலங்களில் பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தமாக கொடுக்கப்படுகிறது. இது மிகவும் விசேஷமான ஒன்று.பச்சை கற்பூரம் உடன் சேர்ந்த துளசி தீர்த்தம் அதனுடைய நறுமணம் உடலுக்கு பெரும் புத்துணர்ச்சியை தருகிறது.பெருமாளுக்கு உகந்த தெய்வீகத் தன்மையுள்ள துளசி "காயகற்ப" மூலிகை என சித்தர்களால் போற்றப்படுகிறது.
துளசி இலை நீரானது கங்கை நீருக்கு சமமாக கருதப்படுகிறது,எனவே துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது. துளசி இலைகளால் அர்ச்சிக்கும் பொழுது பெருமாளின் திருநாமங்களை ஜபிக்க வேண்டும்.நமது கண்கள் திருமாலின் திருவடிகளை மட்டுமே காண வேண்டும். "திருமால் மார்பில் உறைபவளே துளசி அம்மா" என்று பிரார்த்தனை செய்ய வேண்டும் .இப்படி பிரார்த்தனை செய்யும் பொழுது துளசியை மட்டுமல்ல, பக்தனின் கோரிக்கையையும் முழுமையாக ஏற்று பெருமாள் அருள் புரிவார்.

துளசி திருமகளின் அம்சமாகும்.தெய்வீக தன்மையுடைய துளசி மாடங்களை நமது இல்லங்களில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காகவே முற்றங்களில் மாடம் வைத்து வழிபாடு செய்வது நமது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. வெளியில் இருந்து கோவில்களுக்குள் செல்லும் பொழுது புற அதிர்வுகள் கண்களுக்கு புலனாகாத வீச்சுகள் நிறைந்தவை என்றும், இந்த கெடுதல்களில் நிறைந்த தீய அதிர்வுகளை அழித்து நல்ல அதிர்வுகளை தக்கவைக்கும் வல்லமை துளசி மாலைக்கு இருக்கிறது என்பது பழங்காலம் தொட்டு இருக்கும் நம்பிக்கை.
மருத்துவர் ரீதியாக பார்த்தோம் என்றால் சுற்றுப்புறத்தில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் துளசிக்கு உண்டு என்றும் துளசி வாசம் நிறைந்த காற்றிலே சுவாசிக்கும் பொழுது சுவாசப் பாதையில் உள்ள கிருமித் தொற்றுகள் துளசியின் நறுமணத்தால் அழிக்கப்படுகின்றன.
பெருமாள் கோவில்களில் துளசியுடன், பச்சைக் கற்பூரம்,ஏலம் முதலியனவற்றை வெள்ளி அல்லது செப்பு பாத்திரத்தில் வைக்க பெற்று பக்தர்களுக்கு தீர்த்தமாக கொடுப்பார்கள். இது கிருமி தொற்றுகளை அழிக்க வல்ல மருத்துவ குணமிக்க தீர்த்தமாகும். மகாவிஷ்ணுவுக்கு துளசி அளிப்பது மிகவும் புனிதமானதாகவும், பக்தர்கள் அனைவருக்கும் பெருமாள் அருளைப் பெற்றுத் தரும்.புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த மாதம். இம்மாதம் முழுவதும் பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் துளசி இலைகள், மாலைகள் வாங்கிச் சென்று வழிபாடுகள் செய்து பெருமாள் அருள் பெறுவோமாக.
மகிமை மிகுந்த துளசி திருமாலுக்கு உகந்தது. அனைவரும் திருமால் அருளால் நல்வாழ்வு வாழ்வோமாக.மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
தோளோடு தோள் சேர்ந்து நடப்போம்.. Balancing Relationship Is An Art
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்
தெய்வீக ஒளியின் கீழ்..Purpose, the Soul’s True Peace
அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
ஒரு மனசு.. பல சிந்தனைகள்...One mind and too many thoughts
திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்
{{comments.comment}}