புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ம் தேதி முதல் பிறக்கிறது. தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பான மாதங்களில் புரட்டாசிக்கும் தனி இடம் உண்டு.
புரட்டாசி மாதம் சிறப்புகள்.. விசுவாவசு வருடம் 20 25 செப்டம்பர் 17ஆம் தேதி புதன்கிழமை புரட்டாசி மாதம் முதல் நாள் வருகிறது. ஆடி மாதம் மாரியம்மன் வழிபாட்டிற்கும்,அம்மன் பண்டிகைகளுக்கும் உகந்த மாதம் போலவே புரட்டாசி மாதமும் அம்பிகை வழிபாட்டிற்கு உரிய நவராத்திரி, முன்னோர்கள் வழிபாட்டிற்கு உரிய மகாளய பட்சம்,மஹாளய அமாவாசை போன்ற வழிபாடுகளை உள்ளடக்கிய அற்புதமான சிறப்பான மாதமாகும்.
மேலும் புரட்டாசி மாதம் என்பது பாவங்களைப் போக்கி புண்ணியங்களை சேர்க்கும் மாதமாகும். இது பெருமாள் வழிபாட்டிற்கும் உகந்த மாதம். புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள், தான தர்மங்கள் ஆகிய அனைத்துமே அளவில்லாத புண்ணியத்தை தரும் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி துவங்கி அக்டோபர் 17ஆம் தேதி வரை உள்ளது. புரட்டாசி மாதத்தில் வரும் முக்கிய விசேஷ நாட்கள்.
1. புரட்டாசி 05 - மஹாளய அமாவாசை.
2. புரட்டாசி 06- நவராத்திரி ஆரம்பம்.
3. புரட்டாசி 15- சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை.
4. புரட்டாசி 16- -விஜயதசமி, காந்தி ஜெயந்தி.
புரட்டாசி 20 25 முக்கிய விரத நாட்கள் :
1.புரட்டாசி 5 -ஞாயிறு- மஹாலய அமாவாசை.
2. புரட்டாசி 20 -திங்கள்- பௌர்ணமி.
3. புரட்டாசி 24 -வெள்ளி- கிருத்திகை.
4. புரட்டாசி 16 -வியாழன்- திருவோணம் விரதம்.
5. புரட்டாசி 1, புதன்-புரட்டாசி 17 - வெள்ளி- ஏகாதசி விரதம்.
6. புரட்டாசி 12 -ஞாயிறு- புரட்டாசி 26 -ஞாயிறு- சஷ்டி விரதம்.
7. புரட்டாசி 24 - வெள்ளி- சங்கடஹர சதுர்த்தி.
8. புரட்டாசி 4 -சனி- சிவராத்திரி.
9. புரட்டாசி 3 -வெள்ளி- புரட்டாசி 18 -சனி- பிரதோஷம் விரதம்.
10. புரட்டாசி 9 -வியாழன்- சதுர்த்தி விரதம்.
இத்துணை விசேஷ நாட்கள் அடங்கிய புரட்டாசி மாதம் அனைவருக்கும் பெருமாள் அருளும், அம்பிகை அருளும் கிடைக்கப்பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக. இது போன்ற தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!
தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை
வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்
துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்
வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்
பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்
Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
{{comments.comment}}