- ஸ்வர்ணலட்சுமி
உலகின் மிக உயரமான நந்தி எங்க இருக்கு தெரியுமா.. வாங்க பார்க்கலாம்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டத்தில் அமைந்துள்ள வெள்ளாள குண்டம் கிராமத்தில் உலகிலேயே உயரமான நந்தி சிலை மற்றும் ராஜலிங்கேஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள நந்தி 45 அடி உயரம் கொண்டது. உலகிலேயே மிக உயரமான நந்தி சிலைகளில் ஒன்றாகும்.
நந்தியின் அகத்தில் சிவன் கோவில் : பிரம்மாண்டமாக அமைந்துள்ள நந்தி சிலையின் வயிற்றுக்குள் ஒரு அழகான சிவன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது, கோவிலுக்கு மேலும் பெரும் புகழையும், சிறப்பையும் அளிக்கிறது. இக்கோவில் சரியாக எங்கு அமைந்துள்ளது என்பதை பார்ப்போமா...
சேலம் -உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடிக்கு அருகே உள்ள வெள்ளாள குண்டம் கிராமத்தில் இத்துணை பெரிய நந்தி ராஜலிங்கேஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில்,அரியானூரில் அமைந்துள்ள 1008 சிவலிங்க கோவில், எருமாபாளையத்தில் பிரம்மாண்ட ராமானுஜர் கோவில் என பல கோவில்கள் சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. மேலும் சேலம் மண்ணுக்கு மற்றொரு வரலாற்று பெருமையாக அமைந்து இருக்கிறது இந்த உலகின் உயரமான நந்தி ராஜலிங்கேஸ்வரர் சிவன் கோவிலும், பிரம்மாண்டமாக 45 அடி உயரமான நந்தி சிலையும் ஆகும்.
வரலாறு: வெள்ளாள குண்டம் பகுதியைச் சேர்ந்த ராஜவேல் என்பவரின் கனவில் இறைவன் வந்து நந்தி சிலை அமைக்க சொன்னதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் உலகிலேயே உயரமான நந்தி சிலை அமைக்கும் பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ராஜவேல் அவர்கள் தனது கிராமத்தில் சிவ பக்தர்களின் உதவியோடும், அனைத்து மக்களின் உதவியோடும் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோயில் மற்றும் 45 அடி உயரத்தில் பிரமாண்டமான நந்தி சிலை அமைக்கும் பணியை தொடங்கினார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நந்தி சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.மலேசிய நாட்டில் இருக்கும் புகழ்பெற்ற பத்து மலை முருகன் சிலை வடிவமைத்த சிற்பி தியாகராஜன் அவர்களின் குழுவிடம் நந்தி சிலையை அமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.சிற்பி தியாகராஜன் தலைமையில் அவரது குழுவினர் நந்தி சிலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டு, சிறப்பாக நந்தி சிலை வடிவமைக்கப்பட்டது.
நந்தி கோவில் கும்பாபிஷேகம்:
பிரமாண்டமாக அமைந்துள்ள நந்தி ராஜலிங்கேஸ்வரர் சிவன் கோவில் பணிகள் நிறைவடைந்து, கோவில் கும்பாபிஷேகம் இந்த வருடம் 20 25 பிப்ரவரி இரண்டாம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. தனிச்சிறப்பு :உயரமாக அமைந்துள்ள நந்தி சிலையின் வயிற்றுக்குள் 15 அடி உயர சிவபெருமான் சிலை உள்ளது கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். பக்தர்கள் நந்தி வயிற்றில் உள்ளே சென்று தரிசிக்கும்படி மலையில் இருந்து தோன்றும் வடிவில் 15 அடி உயர சிவபெருமான்,18 சித்தர்கள்,பைரவர், சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ல் முகூர்த்த கால் நடப்பட்டு 20 25 ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம் விழாவில் தீர்த்த குட ஊர்வலம்,பால்குடம் எடுத்தல், தீபஜோதி விளக்கேற்றுதல், விக்னேஸ்வர, நவகிரக, தன்வந்திரி, இரண்டாம் கால யாகம்,லட்சுமி பூஜைகள்,சுதர்சன ஹோமம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிவன் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. நந்தி பெருமானுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேகம்,அலங்காரம், நெய்வேதியம்,மகாதீப ஆராதனை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. சேலம் மாவட்டத்திற்கு வரலாற்றுச் சிற்பமாக அமைந்துள்ள இந்த வெள்ளாள குண்டம் நந்தி ராஜலிங்கேஸ்வரர் சிவன் கோவிலை சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் கண்டுக்களிக்கவும்.
சிவ பக்தர்களுக்கும் சுற்றுலா பிரியர்களுக்கும் இப்பதிவு நன்மை தரும் என நம்புகிறோம். மேலும் வாசகர்கள் அனைவரும் தொடர்ந்து இணைந்திருங்கள். தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்: அச்சத்தில் சுற்றுலா பயணிகள்
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?
வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?
{{comments.comment}}