சென்னை : என்டிஏ கூட்டணியில் விஜய் இணைய போவதாகவும், அது தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் வெளியான செய்திகள் தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
என்டிஏ கூட்டணியில் தவெக இணைவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு என்டிஏ கூட்டணியில் இணைய விஜய்யும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் நேற்று முதல் மீடியாக்களில் செய்தி பரவி வந்தது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், யூகங்களின் அடிப்படையிலேயே பல செய்திகளை மீடியாக்களில் எழுதி வருகிறார்கள்.
தவெக.,வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பல முறை தெளிவுபடுத்தி விட்டார். நானும் பலமுறை சொல்லி விட்டேன். காபியும் டீயும் ஒன்றாக கலக்காது என்று சொல்லி விட்டார். காரணம், கொள்கை, சித்தாந்தம் என முற்றிலும் மாறுபட்ட கட்சிகள் எப்படி ஒன்றாக இணைய முடியும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது. இந்த தேர்தலில் உறுதியான, வலிமையான வெற்றியை நாங்கள் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

மதுராந்தகம், மதுரையை தொடர்ந்து நாளை பிரதமர் மோடி, கொச்சி வழியாக திருச்சி வர உள்ளார். நாளை மாலை திருச்சியில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி பொதுக்கூட்டம் நிச்சயம் திருப்பம் தரும் கூட்டமாக அமையும். என்டிஏ கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டமாகவும் அமையும். தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதையும், மற்ற விஷயங்களையும் முடிச்சு போட்டு பார்க்க வேண்டாம். அவர் விடுவிக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உள்ளது. அவரை கட்சி வேறு விதமாக பயன்படுத்தும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதனால் என்டிஏ கூட்டணியில் விஜய் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு அண்ணாமலை, தெளிவான விளக்கம் அளித்து முற்றுபுள்ளி வைத்துள்ளார். இது என்டிஏ மற்றும் தவெக கட்சியில் இருக்கும் சில தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், விஜய்-என்டிஏ கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை அண்ணாமலை தெளிவுபடுத்தி உள்ளார்.
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல்!
மீண்டும் நீ வேண்டும் பாரதி!
Vinayagar Chathurthi Special: அழகான அலங்காரம்.. மஞ்சள் பிள்ளையார் செய்வது எப்படி?
கொந்தளித்த திருமா.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
அவசியம் என்றால் தவறான பக்கத்தை கிழிக்கலாம்!
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
{{comments.comment}}