சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், தவெக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறுவதாகத் திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினரான சீனிவாச சேதுபதி போட்டியிட்டார். இதில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தனக்கு வர வேண்டிய தபால் வரால், வேறு ஓட்டுச்சாவடிக்கு மாறி சென்று விட்டதால், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என பெரியகருப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கை மற்றும் வாபஸ்:

இந்த வழக்கானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரான திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தரப்பில், வழக்கு மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பெரியகருப்பன் தனது மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
அரசியல் களத்தில் முக்கியத்துவம்:
தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பு வந்திருந்தால், தமிழக சட்டசபையில் தவெக எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கை 106 ஆக குறைந்திருக்கும். ஏற்கனவே 118 என்ற பெரும்பான்மை இல்லாமல் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் தவெக அரசு நடந்து வருகிறது. இந்த சமயத்தில் தவெக எம்எல்ஏ.,க்களின் பலம் குறைந்தால் அது அரசுக்கு சிக்கலாக மாறி இருக்கும். அதே சமயம், திமுக பெரியகருப்பன் வெற்றி பெற்றதாக தீர்ப்பு வந்திருந்தால் அது திமுக.,விற்கு கிடைத்த வெற்றியாகவும், தவெக.,விற்கு பின்னடைவாகவும் அமைந்திருக்கும். ஆனால் திடீரென பெரியகருப்பன் எதற்காக வழக்கை வாபஸ் பெற்றார் என்ற காரணம் தெரியவில்லை.
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஓடும் நதி ஓசையிலே.. தோடி ராகம் கேட்குதே!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
குழந்தை
புதுவருட டைரி!
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}