சென்னை : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்றும், கூட்டணியை பிரிக்க சில ஊடகங்கள் முயல்வதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, "தமிழக முதல்வர் விஜய் தான் 2029ல் பிரதமர் வேட்பாளர்; தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானதை போல் 2029 லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டு, விஜய் இந்தியாவின் பிரதமர் ஆவார்" என தவெக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் பலர் பேசி வருகின்றனர். சட்டசபை கூட்டத்திலேயே இதை எம்எல்ஏ., அமைச்சர்கள் பலரும் பேசினார்கள். இதனை காங்கிரஸ் தரப்பில் பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.
பிரதமர் வேட்பாளர் விவகாரம் :

விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) தொடர்ந்து கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க மறுத்த மாணிக்கம் தாகூர், "ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்; இதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை" எனத் தெளிவுபடுத்தினார். மேலும், பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் முதலமைச்சரும் தெளிவாக இருப்பதாகவும், முடிந்து போன விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு
தவெக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணியைப் பிரிக்க சில ஊடகங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். மேலும் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் தவெக கூட்டணிக்கு அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டணி வலுவாக உருவாகி நல்ல நிலைக்குச் செல்ல வேண்டும் என்றும், அனைத்து முக்கியப் பிரச்சினைகளிலும் ஒருமித்தக் கருத்து எடுக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூரின் இந்த கருத்து, பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தவெக-காங்கிரஸ் இடையே சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது. தவெக எம்எல்ஏ.,க்கள் அமைச்சர்கள், முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என தொடர்ந்து கூறி வருவது, கட்சி தலைமையின் அனுமதி இல்லாமல் நடக்காது என்பதால் தவெக தலைமையே தேசிய அரசியலில் நுழையும் எண்ணத்தில் இருப்பதையே இது காட்டுகிறது. இருந்தாலும் தவெக தலைமையினா தேசிய அரசியல் திட்டம், தவெக-காங்கிரஸ் கூட்டணியை பாதிக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இடர்பாடுகள்
ஆசிரியர் எனும் அகல்விளக்கு!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
“Teaching: A Gift from God”
தாணுமாலயன் (இயற்கையை போதிக்கும் ஆசான்)
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
{{comments.comment}}