எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

Jul 24, 2026,05:32 PM IST


டெல்லி: ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், இந்திய அணியின் டி20 கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.


ஹராரே நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் மூலம், சர்வதேச ஆண்கள் டி20 போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் தான் விளையாடிய முதல் 8 போட்டிகளிலுமே தொடர்ச்சியாக டாஸ் வென்ற உலகின் முதல் கேப்டன் என்ற தனித்துவமான உலக சாதனையை ஸ்ரேயஸ் ஐயர் எட்டியுள்ளார்.


இதற்கு முன்பு பஹாமாஸ் அணியின் கேப்டன் கிரிகோரி டெய்லர் (7 முறைகள்) வைத்திருந்த சர்வதேச சாதனையை அவர் முறியடித்துள்ளார்.


மேலும், இந்திய கேப்டன்களில் தொடர்ந்து அதிக முறை டாஸ் வென்ற முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையையும் ஸ்ரேயஸ் முறியடித்துள்ளார். தோனி 2010 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் தொடர்ச்சியாக 7 டி20 போட்டிகளில் டாஸ் வென்றிருந்ததே இதுவரை இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தது.




முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் 7 விக்கெட் வீழ்ச்சிக்கு 125 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். மயங்க் யாதவ் (2/18) மற்றும் பிரின்ஸ் யாதவ் (2/19) சிறப்பாக பந்துவீசினர்.


தொடர்ந்து 126 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு 15 வயதான இளம் புயல் வைபவ் சூரியவன்ஷி 18 பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசி அபார தொடக்கம் தந்தார். இறுதியில் ஆட்டமிழக்காமல் ஸ்ரேயஸ் ஐயர் 28 ரன்கள் எடுத்தார். அவரும் திலக் வர்மா கூட்டணியின் சிறப்பான ஆட்டம் காரணமாக, இந்தியா 13.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


கேப்டனாக தனது முதல் வெற்றியை பதிவு செய்த ஸ்ரேயஸ் ஐயர், அணியின் சிறப்பான செயல்பாட்டை வெகுவாக பாராட்டியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்