- சியாமாளா வெங்கட்ராமன்
உலகிலேயே மிகப்பெரிய மலை இமயமலை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது என்னுடைய பூகோள பாடம் நடத்தும் ஆசிரியை இமயமலை பற்றி வர்ணித்துக் கூறும் போது அதைப் பற்றிய கற்பனை என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். திருப்பதி மலையை பார்க்கும் போது இந்த மலையே இவ்வளவு பெரிதாக இருக்கும் பொழுது இமயமலை எப்படி இருக்கும் என்று நான் வியந்து போவேன்.
இமயமலை பார்க்க வேண்டும் என்ற ஆவல் சிறுவயதிலேயே எனக்கு உண்டு. முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படலாமா? இமயமலை பற்றி வரும் படங்களை பார்த்து என் ஆசையை தீர்த்துக் கொள்வேன்
என் சிறிய மகனும் மருமகள் பேரன் மூவரும் எவரெஸ்ட் சிகரம் ஏற முடிவு செய்து நேபாளில் உள்ள காட்மண்டு சென்றார்கள். அங்கே இருந்து தங்கள் பயணத்தை தொடங்கினார்கள். எங்கெல்லாம் சிக்னல் கிடைக்குமோ அங்கெல்லாம் எனக்கு அந்த இடத்தை வீடியோ மூலம் காண்பிப்பார்கள். நானும் அவர்களுடன் மலை ஏறுவது போல் நினைத்துக் கொள்வேன். அதுவே எனக்கு மிகுந்த ஆனந்தத்தை கொடுத்தது.
இந்த நினைப்பு என் ஆசையை மேலும் மேலும் ஏற்படுத்தியது ஆனால் நானோ சூப்பர் சீனியர். ஒரு சிறிய படியை கூட ஊன்றுகோல் வைத்துக்கொண்டு (ஸ்டிக்) ஏறுகிறேன். அதனால் என் ஆசை நிறைவேறாத ஆசை என்று சமாதானம் செய்து கொண்டேன்.

என் மனதில் உள்ளதை மகனும் மருமகளும் அறிந்து கொண்டு நான் யூகே வில் இருந்து சென்னை திரும்பும் முன் புது வருட சர்ப்ரைஸ் கிப்டாக காட்மண்ட் போக ஏர் டிக்கெட் புக் செய்து என்னிடம் கொடுத்து அசத்தினார்கள். அத்துடன் அவர்களும் நேபாள் வருவதாகச் சொன்னார்கள். என்னுடைய ஆனந்தத்திற்கு கேட்கவா வேண்டும்?
அதைவிட அங்கே இருந்து இமயமலை பார்க்க ஏற்பாடு செய்திருப்பதாக கூற என் ஆனந்தம் இரண்டு மடங்கு ஆயிற்று! சென்னைக்கு வந்து அங்கிருந்து காட்மண்டுக்கு சென்றேன். காட்மண்டில் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்துவிட்டு மறுநாள் மதியம் ஒரு வாடகை கார் எடுத்துக் கொண்டு எட்டாயிரம் அடி உயரத்தில் உள்ள பள்ளத்தாக்கின் விளிம்பில் உள்ள நாகல்கோட் என்ற கிராமத்திற்கு புறப்பட்டோம். அந்த இடம் புதர் நிலங்கள் பாதைகளால் சூழப்பட்டிருந்தது, மிக ஆபத்தான வளைவுகள் உள்ள பாதைகளில் நாங்கள் சென்றோம். விதவிதமான பட்டாம்பூச்சிகளால் அந்த வழிகள் ஒரு சொர்க்கம் போல் காட்சியளித்தது,
மாலை இருள் சூழும் நேரம் நாங்கள் ஹோட்டல் மெஜஸ்டிக் மவுண்டன் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம் அங்கிருந்து காலை உதிக்கும் சூரிய உதயத்தை பார்க்க முடியும் என்பதால் அங்கு அறை எடுத்துக் கொண்டு இரவு தங்கினோம். அந்த ஹோட்டலின் தலைவர் சரியாக காலை 7:00 மணிக்கு சூரிய உதயம் தோன்றும். அதை நீங்கள் பால்கனியில் இருந்து பார்க்கலாம் என்று கூறினார்.
கடிகாரத்தில் ஏற்படும் நேரம் மாறினாலும் சரியாக ஏழு மணிக்கு சூரியன் இமயமலையின் உள்ளிருந்து வெளியே வரும் என்பதை கூறினார். எனவே எல்லோரும் 7:00 மணிக்கு முன்பாக பால்கனியில் சென்று அமர்ந்து விடுங்கள் என்று கூறினார். நாங்களும் இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு சீக்கிரமாக படுக்கச் சென்றோம். காலை 5 மணிக்கு எழுந்து சுட சுட காபியுடன் பால்கனிக்கு வந்தோம்.
இமயமலையும் எவரெஸ்ட் சிகரமும் பனி மூடி வெண்மையாக காட்சி கிடைத்தது. இயற்கைக்கு எப்படி தான் மணி தெரிகிறதோ. சரியாக ஏழு மணிக்கு சூரியன் தகதகவென்று பிரகாசத்துட்ன் ஒரு சிவந்த பழம் போல் இமயமலையின் நடுவே வெளியே வர தொடங்கியது. அந்த காட்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
என் வாழ்நாள் ஆசை நிறைவேறியது. பனி சிகரங்களின் மேல் சூரிய உதயம் கதிர்கள் பட்டதும் தகதகவென தங்கம் போல் ஒளி வீசியது. பார்க்க மிகவும் ஆனந்தமாக இருந்தது. அதில் சில போட்டோக்களை எடுத்தேன். அதை உங்களுக்கும் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். நீங்களும் அதைப் பார்த்து சந்தோஷமடையுங்கள். நான் கண்ட இமயம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ! கோடி பணம் கொடுத்தால் கூடகிடைக்காத அரிய காட்சி இது!!!!
(ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரான சியாமளா வெங்கட்ராமன், நெய்வேலி என்.எல்.சி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு பத்திரிகைகளுக்குச் சிறுகதைகள் மற்றும் சமையல் குறிப்புகளை எழுதிவரும் இவர், எழுதிய 'யாதுமாகி நின்றாள்' சிறுகதைக்காக 'தமிழ்த்தாய்' விருதைப் பெற்றுள்ளார். மேலும், சென்னை ராமபுரத்தில் ஸ்ரீ விக்னேஸ்வரா லேடீஸ் கிளப்பைத் தொடங்கி அதன் தலைவியாகச் செயல்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கி சமூகத் தொண்டு செய்து வருகிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்)
துணை ஜனாதிபதி சொன்ன அந்த "தமிழ் பிரதமர்" யாராக இருக்கும்? - அதிகரிக்கும் சுவாரஸ்யம்!
ஒரு ஆசிரியராக பள்ளியில் காலடி எடுத்து வைத்தபோது!
பளிங்கர்கள்.. ஜோ இது உனக்கு தேவையா??!
நாளை நமக்கான நாளாகும் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (10)
ஓய்வு.. ஒரு நிமிடக் கதை (50)
உங்க ஏரியாவுல எப்ப மழை பெய்யும்.. துணி காயப் போடலாமா?.. இப்படியும் ஒரு சைட் இருக்குங்க!
தென்தமிழ் தலையங்கம்: தமிழ்நாடு என்னும் பேரடையாளம் - தியாகமும் பெருமையும் சங்கமிக்கும் திருநாள்!
நான் கண்ட (சொர்க்கம்) இமயம்!
கதவுக்கு அப்பால் மறைந்திருக்கும் ரகசியம்.. அவள் யாரென்று தெரியுமா? (3)
{{comments.comment}}