தமிழக முதல்வர் விஜய் நடித்து, கடைசி படமாக வெளியாகி உள்ளது ஜனநாயகன் படம். டைரக்டர் எச்.வினோத் இயக்கத்தில், அனிருத்தின் இசையில், கேவிஎன் புரொடெக்ஷன்ஸ் தயாரித்து, ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பு மற்றும் பல மாத காத்திருப்பிற்கு பிறகு ஜனநாயகன் படம் ரிலீசாகி உள்ளது. 2026ம் ஆண்டு பொங்கல் ரிலீசாக ஜனவரி 09ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம், ஏழு மாத சட்ட போராட்டத்திற்கு பிறகு ஜூலை 23ம் தேதியான இன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 3 மொழிகளில் உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது.
படம் ரிலீசாவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி விட்டன. படமும் ஆன்லைனில் கசிந்து விட்டது. இருந்தாலும் விஜய், முதல்வராக பதவியேற்ற பிறகு வெளியாகும் அவரது படம் என்பதால் விஜய் ரசிகர்களும், அவரது கட்சி தொண்டர்களும் ஜனநாயகன் பட ரிலீசை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் இந்த அளவிற்கு கொண்டாடி தீர்க்கும் அளவிற்கு படம் நிஜமாகவே பிளாஸ்டாக இருக்கா? அல்லது ரசிகர்களை ஏமாற்றி பிளாப் ஆகி உள்ளதா என பார்க்கலாம்.
ஜனநாயகன் கதை என்ன?
விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியேல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் ஜனநாயகன். இறந்து போன தனது நண்பரின் மகளை வளர்த்து, அவரை இந்திய ராணுவத்தில் சேர வைப்பதற்காக ஊக்குவித்து, துணை நிற்கிறார் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர். அந்த பெண் தனது லட்சியத்தை அடைவதற்கும், ஜனநாயக அமைப்புக்களுக்கும் இடையூறாக ஊழல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களை எப்படி எதிர்கொண்டு, தனது வளர்ப்பு மகளின் லட்சியத்தை அந்த போலீஸ் அதிகாரி நிறைவேற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை. இதில் தளபதி வெற்றி கொண்டான் என்ற ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கேரக்டரின் விஜய் நடித்துள்ளார். அவரது மகளாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
படத்தின் ப்ளஸ் :

ஜனநாயகன் படத்தின் ப்ளஸ் என்று பார்த்தால் நிறைய உள்ளது. டைட்டில் கார்டு, விஜய்யின் இன்ட்ரோ சீன், தளபதி கச்சேரி பாடல், அதில் விஜய்யின் நடனம், இன்டர்வெல் பிளாக் என ஃபர்ஸ்ட் ஆஃபில் மாஸ் காட்டி உள்ளார்கள். இரண்டாவது பாதியில் வரும் பிளாஷ்பேக், கண்ணகி, விருந்து, எம்ஜிஆர் சீன்களில் தியேட்டரில் நிஜமாகவே பிளாஸ்ட் செய்திருக்கிறது. ஒரு பேரே வரலாறு பாடல், பள்ளிக்கூட சீன் செம சூப்பர். அனிருத், வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இசையில் பட்டைய கிளப்பி உள்ளார். ஒளிப்பதிவு, ஆக்ஷன் காட்சிகள், வசனங்கள் ஆகியவை ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. படத்தில் வரும் வசனங்களும், பாடல் வரிகளும் விஜய்க்காகவும், அவரது அரசியல் பயணத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் மைனஸ் :
எச்.வினோத் முழுக்க முழுக்க விஜய்யை மட்டுமே மனதில் வைத்தும், அவரது கடைசி படம் என்பதால் ரசிகர்களை குஷிப்படுத்தவும், கொண்டாட வைக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி உள்ளார். அதனால் படத்தில் வில்லன் கேரக்டரை டம்மி ஆக்கி விட்டார். வில்லனான பாபி தியோல் வரும் காட்சிகள் செம மொக்கையாக உள்ளது. அதே போல் விஎஃப்எக்ஸ் மற்றும் க்ளைமேக்ஸ் சண்டை காட்சிகளும் படு சொதப்பல். விஎஃப்எக்ஸ் காட்சிகள் ஏற்கனவே பல படங்களில் பார்த்து அலுத்து போன உணர்வையும், தெலுங்கு படங்களை நினைவுபடுத்துவதுமாக உள்ளது.
படம் எப்படி இருக்கு?
ஜனநாயகன் பிளாஸ்டா? ஃபிளாப்பா? என்று கேட்டால் நிச்சயமாக பிளாஸ்டா செய்திருக்கிறார்கள். படம் ரிலீசாவதற்கு முன்பே படத்தின் வெற்றியை உறுதி செய்து விட்டார்கள். வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். ஆனால் படம் மீண்டும், மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் இருக்கிறதா என கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். விஜய்யின் கடைசி படம் என்பதால் ஒருமுறை பார்க்கலாம். அதுவும் விஜய்க்காக பார்க்கலாம்.
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஓடும் நதி ஓசையிலே.. தோடி ராகம் கேட்குதே!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
குழந்தை
புதுவருட டைரி!
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}