சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!

Feb 04, 2026,05:59 PM IST

டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் கண்ட ஒரு காட்சி பெண் ஒருவரை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. அவரை மட்டுமல்ல, அந்த மேட்டரைப் படிக்கும் எல்லோருக்குமே ஆச்சரியம்தான் வரும்.


நம்ம ஊர் மெட்ரோ ஸ்டேஷன்களில் வழக்கமாக நொறுக்குத் தீனிகளோ அல்லது தண்ணீர் பாட்டில்களோ விற்கும் இயந்திரங்களைப் பார்த்திருப்போம். ஆனால் டெல்லியில் கொஞ்சம் 'அட்வான்ஸாக' யோசித்து ஒரு புதிய மெஷினை வைத்துள்ளனர். 




ரோகிணி கிழக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் இந்த விற்பனை இயந்திரங்களில் விற்கப்படுவது சிப்ஸ் பாக்கெட்டுகள் அல்ல, மாறாக பேக் செய்யப்பட்ட உள்ளாடைகள்!


இதைப் பார்த்த ஒரு பெண்,  மெட்ரோ ட்ரெயினில் போகும்போது யாருக்குப்பா இது அவசரமா தேவைப்படும்? என கிண்டலாக வீடியோ எடுத்துப் போட, அது இப்போது செம வைரல். ஆரம்பத்தில் பலரும் இதை வேடிக்கையாகப் பார்த்தாலும், போகப் போகத்தான் இதன் உண்மையான பயன் புரிய ஆரம்பித்திருக்கிறது.


திடீரென மழையில் நனைந்துவிட்டால் அல்லது பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் எதிர்பாராத 'கசிவு' ஏற்பட்டால், இந்த மெஷின் எவ்வளவு பெரிய உதவியாக இருக்கும்? எனப் பல நெட்டிசன்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜப்பான் போன்ற நாடுகளில் இது சாதாரணம் என்றாலும், இந்தியாவிற்கு இது ஒரு புதுமையான மாற்றம்தான். என்னதான் சிரிப்பு வந்தாலும், சற்றே சிந்தித்துப் பார்த்தால், இது ஒரு அருமையான ஐடியா என்பதில் சந்தேகமே இல்லை. அவசர காலம் பெண்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அந்த நேரத்திற்கு இது ஒரு 'லைஃப் சேவர்' என்பதில் மாற்றுக் கருத்தில்லை!


நீங்க என்ன நினைக்கறீங்க பிரண்ட்ஸ்.. சொல்லுங்களேன்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

news

"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி

news

இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்

அதிகம் பார்க்கும் செய்திகள்