சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருதுகளில், தகுதியான திரைக் கலைஞர்கள் பலரும் புறக்கணிப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதை சரி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக பலரும் பேசி வருகிறார்கள். பல கலைஞர்களுக்கு விருதுகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் சர்ச்சைகள் நிலவுகின்றன. பல நல்ல படங்களுக்கு விருதுகள் தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக தற்போது வன்னி அரசும் தனது கவலையை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாடு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக பல பகுதிகளில் இருந்தும் கண்டன குரல்களும் அதிருப்திகளையும் பலரும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை காண்கிறோம்.
திரை உலகினரிடம் விசாரித்து பார்த்ததில் ரீமேக் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி,
சமூக நீதிப் பேசிய படங்கள் புறக்கணிப்பு, தேசிய விருது பெற்ற திரைப்படங்கள் புறக்கணிப்பு, தேர்வு குழுவினருக்கு சாதகமானவர்களுக்கு விருது, பேய் படங்கள் திரில்லர் படங்களுக்கு விருது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பல இயக்குனர்களும் நடிகர்களும் ஆதங்கங்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலை, ஜிப்சி, மண்டேலா, காலா, கபாலி, எல் கே ஜி, ராட்சசி, உறியடி, சேத்து மான் போன்ற பல சமூக நீதிப் பேசிய திரைப்படங்கள் விருதுகளில் புறக்கணிக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது.
மண்டேலா, சிவரஞ்சனியும் சில பெண்களும், சூப்பர் டீலக்ஸ், சில நேரங்களில் போன்ற தேசிய விருது பெற்ற திரைப்படங்கள் கூட புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
மாறாக காஞ்சனா, காஷ்மோரா, மோகினி, டைரி, திருட்டுப் பயலே, புரியாத புதிர், சண்டக்காரி, கைதி, மாநகரம் என்று பேய் படங்களுக்கும் திரில்லர் படங்களுக்கும் அதிக விருதுகளுக்கு முன்னுரிமை தரப்பட்டு, மாவீரன் கிட்டு, ஜோக்கர், பேரன்பு, அறம் போன்ற திரைப்படங்களுக்கு சொற்ப விருதுகள் தரப்பட்டிருக்கின்றன.
நெற்றிக்கண் என்ற திரைப்படம் சிறந்த பெண்களை போற்றும் திரைப்படமாக விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது அது கொரியா படத்தின் ரீமேக் என்று தெரிகிறது. அதுபோல சண்டக்காரி என்பது மலையாள மை பாஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக் என்றும், நெஞ்சுக்கு நீதி ஹிந்தி படத்தின் ரீமேக் என்றும் தெரிய வருகிறது. தமிழின் சிறந்த படங்கள் புறக்கணிக்கப்பட்டு இந்த படங்கள் தேர்வு செய்யப்படுவது நியாயமானது கிடையாது.
மேலும் சில நடிகர்களுக்கு கொடுத்த விருதுகள் சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
விருதுகள் என்பது ஒரு கலைஞனை உற்சாகப்படுத்துவது. குறிப்பாக தமிழ்நாடு விருதுகள் என்பது சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டது, அதில் பேய் படங்களுக்கும் பொழுது போக்கு படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து சமூகப் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் விருதுகள், சமூக நோக்கத்துடன் திரைப்படம் எடுத்த இயக்குனர்களையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் புறக்கணிப்பதாக அமைந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
கமர்சியல் விருதுகள் தரப்படும் பட்டியல்களில் இருக்கும் அதே நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர்கள் இங்கும் பட்டியலிடப்படுவது. சமூக நீதிச் சார்ந்து சிந்திக்கும் இயக்குனர்களை தொழில்நுட்ப கலைஞர்களை நேரடியாக புறக்கணிப்பது போல ஆகிவிடும், அவர்களுக்கு கமர்சியல் விருதுகளிலும் இடம் அளிக்கப்படாது, தமிழக அரசு விருதுகளிலும் இடம் அளிக்கப்படாது என்றால், இது போன்ற திரைப்படங்கள் உருவாவதற்கு தடையாக இது அமைந்து விடும், அவர்களுக்கெல்லாம் இடமே இல்லை என்ற சூழல் உருவாகி விடும் என்பதை தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இது ஒரு தரப்பினரிடம் எதிர்ப்பு மனப்பான்மையை உருவாக்கி விடும் என்பதையும் அரசு சரியாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
உடனடியாக இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
சமூக நீதியை மையமாகக் கொண்ட இந்த அரசு, சமூக அக்கறையுடன் என்ற நோக்கத்துடன் கொடுக்கப்படும் விருதுகள் சரியானதாக தான் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை ஆராய்ந்து, தகுதியானவர்களுக்கு விருது கிடைக்கும் வகையில், அறிவிப்பை நிறுத்தி வைத்து மீண்டும் சரியான முறையில் திரைப்பட விருதுகள் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!
ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
கண்ணன் உண்டு நம்முடனே.. கண்ணீர் எதற்குக் கண்களிலே!
கலாமின் உயர்ந்த கருத்துகள்!
Jokes: அண்டாவை மட்டும் வச்சியே.. கூடவே ஒரு குண்டாவையும் வச்சுருக்கலாம்ல
தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை
சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!
தந்தையின் உடல்நிலை சரியில்லை... பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை
{{comments.comment}}