உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?

Aug 04, 2026,01:08 PM IST

சென்னை : தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் கூறி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.


தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் : 


எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். 


"நாளை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வது ஜனநாயக உணர்வுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் சிறிதும் பொருந்தாத செயலாகும்." மேலும் பேசுகையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'வாய்ப்பூட்டுச் சட்டம்' போல், தற்போதைய அரசு எதிர்க்கட்சிகளின் குரலை முடக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.




பாமக அன்புமணி ராமதாஸ் :


பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸும் இக்கைது நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தமிழ்நாட்டின் தலையாய மற்றும் முக்கியமான பிரச்சனைகளில் கூட அரசும் காவல்துறையும் காட்டாத அவசரத்தை, எதிர்க்கட்சித் தலைவரின் கைது நடவடிக்கையில் காட்டியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இந்த அவசரக் கைதின் பின்னணியில் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் மட்டுமே ஒளிந்திருக்கிறது என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


உதயநிதி பேசியதும் கண்டனத்திற்குரியது, அதற்காக தமிழக அரசு எடுத்துள்ள கைது நடவடிக்கையும் கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.


திமுக ஆர்.எஸ்.பாரதி :


திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஜனநாயகன் படத்தில் நடித்தாரே தவிர ஜனநாயகத்தை பற்றி முதல்வருக்கு ஒன்று தெரியாது. த்ரிஷா வீட்டில் மட்டும் தண்ணீர் வருகிறதே என உதயநிதி பேசியதில் என்ன தவறு இருக்கிறது.


த்ரிஷா என்ன பிரதமரா? அவரை பற்றிய பேசியதும் மட்டும் இவ்வளவு அவசரமாக கைது நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். நாளை சட்டசபை துவங்க உள்ள நிலையில், ஆளே இல்லாத மைதானத்தில் பந்தாட நினைக்கிறார் முதல்வர் என தெரிவித்துள்ளார்.


திமுக எம்.பி., கனிமொழி :


எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது.


நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம் என திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.


மதிமுக துரை வைகோ : 


அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டமன்றம் கூடுவதால் கைது எனச் சொல்வது ஏற்புடையது அல்ல என சமீபத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக கூட்டணியில் இணைந்துள்ள மதிமுக.,வின் எம்.பி., துரைவைகோ தெரிவித்துள்ளார்.


பாஜக வானதி சீனிவாசன்:


உதயநிதி ஸ்டாலின் கைது, இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம். பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள், பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்பவர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் முதல்வர் விஜய் நடவடிக்கையை வரவேற்கலாம் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Dilani Sridharan Poem: கைம்பெண்ணின் க(வி)தையிது!

news

Santhi Sinnathambi Poem: மாற்றியதோ மாறியதோ!

news

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?

news

உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?

news

நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

news

கரும்பாக இல்லறம் இனிக்க காவேரி தாய் வேகமாய் வருகிறாள்!

news

உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

news

தஞ்சாவூர் நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கைது

news

உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூரில் தவெக மகளிர் அணி சார்பில் போலீசில் புகார்

அதிகம் பார்க்கும் செய்திகள்