- எம்.எல்.பிரபா
வரவிருப்பது மழைக்காலம்.
"பொன்னுருகக் காயும், மண்ணுருகப் பெய்யும் மணவாளப் புரட்டாசி" என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்றார் போல் மாலை நேரத்தில் சில தினங்களில் மழை பெய்கிறது. அந்த சமயத்தில் சுடச்சுட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிடும் எண்ணம் தோன்றும்.
அதுபோன்ற சமயங்களில் சுலபமாகவும், சுவையாகவும், உடனடியாக ருசியான ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடுவதற்கு இதோ ஒரு ரெசிபி. சொல்லும்போதே, நாக்கில் எச்சில் ஊறுகிறது அல்லவா? வாருங்கள் மொறு மொறு துணுக்கு ஸ்னாக்ஸ் நீங்களும் செய்யலாம்.
மொறு மொறு துணுக்கு - தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு ஒரு கப்
உளுத்தம் பருப்பு ஒரு கப்
மிளகாய் வற்றல் 4
பச்சை அரிசி 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி
சிறிது பெருங்காயத்தூள்
சிட்டிகை அளவு மஞ்சள் தூள்
பொரிப்பதற்கு சமையல் எண்ணெய் கால் லிட்டர்.

செய்முறை:
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு எடுத்து இரண்டு முறை நன்றாக கழுவி பிறகு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு பருப்பை மிக்ஸியில் போட்டு அதனுடன் மிளகாய் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும்.
அதில் கடைசியாக பச்சரிசியை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும். கெட்டியான மாவை எடுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றவும். அதில் உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் ,நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
வாணலியில் பொரிப்பதற்கு எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடான பின் கேஸ் ஸ்டவ்வை மிதமான சூட்டில் வைக்கவும். கலந்த மாவை எடுத்து சிறு சிறு உருண்டையாக உருட்டி எண்ணெயில் போட்டு நன்றாக பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
சூடாக பரிமாறவும், சுவையாக இருக்கும். மொறு மொறு துணுக்கு ரெடி. குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகும்.. என்னங்க இன்னிக்கு செஞ்சு சாப்பிட்டுட்டுச் சொல்லுங்களேன்.
(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
Santhi Sinnathambi Poem: வனவளம் காப்போம்!
விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.. 3வது ஸ்லோகம் சொல்வது என்ன?
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
தர்மத்தின் வழியில் நடக்கும் போது இறைவன் நிச்சயம் துணையாக இருப்பான்.. மகாபாரத ரகசியம்!
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
செல்வம் பெற இப்பதிகம் பாடுக!
{{comments.comment}}