சென்னை:காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இருந்து விடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அழைப்பை ஏற்க மறுத்ததன் பின்னணி :
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நோக்கில் ராகுல் காந்தி தரப்பிலிருந்து மு.க.ஸ்டாலினைத் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட பல்வேறு பணிகளில் தான் மிகவும் பரபரப்பாக (பிசியாக) இருப்பதாகக் கூறி, ராகுல் காந்தியுடன் தொலைபேசியில் பேச மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டணி முறிவும், பழைய நிகழ்வுகளும் :

பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு, கூட்டணியில் இருந்து விலகியது. மேலும் ஆளும் கட்சியான தவெக.,விற்கு ஆதரவாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஓட்டளித்து, தவெக அரசு கவிழாமல் காப்பாற்றியது. தவெக கூட்டணியில் மட்டுமின்றி தமிழக அமைச்சரவையில் காங்கிரசிற்கு இடம் அளிக்கப்பட்டது. அதோடு திமுக - காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் டில்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்த திமுக.,வை சேர்ந்த யாரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய பேசு பொருளானது. இந்த நிலையில் தான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இந்த விழாவிற்கு அழைக்க ராகுல் அலுவலகம் முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால் ராகுலின் தொலைப்பேசி அழைப்பை ஏற்று அவருடன் பேச மு.க.ஸ்டாலின் மறுத்து விட்டதாகவும் பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஸ்டாலின் பேச மறுத்ததன் பின்னணி :
கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் சிக்கல் ஏற்பட்டபோது, மு.க.ஸ்டாலின் விடுத்த தொலைபேசி அழைப்பை ராகுல் காந்தி ஏற்க மறுத்துவிட்டதாக அப்போது கூறப்பட்டது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவோ அல்லது அதன் தொடர்ச்சியாகவோ தற்போதைய நிகழ்வு அமைந்துள்ளதா என்ற கோணத்திலும் அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்தத் தொலைபேசி அழைப்பு விவகாரம் குறித்து திமுக தரப்பிலிருந்தோ அல்லது காங்கிரஸ் தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை. இரு கட்சிகளின் தலைவர்களும் இது குறித்துப் பதிலளிக்கும் பட்சத்திலேயே இதன் உண்மைத்தன்மை மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்துத் தெளிவாகத் தெரியவரும்.
திமுக விளக்கம் :
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மு.க.ஸ்டாலின் மீது காங்கரிசிற்கும், ராகுலுக்கும் மிகுந்த மரியாதை உள்ளதால் இது போல் நடந்திருக்க வாய்ப்பில்லை என விளக்கம் அளித்துள்ளார். இருந்தாலும் சமீப காலமாக காங்கிரசும் திமுக.,வும் எதிர் எதிராக செயல்பட்டு வருவதால் இது நடந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.
தங்கை – பிறக்காத உறவிலும் பூத்த பாசம்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (16)
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி: மங்கோலியா அதிபர் உக்னாகின் குரேல்சுக் திடீர் பதவி விலகல்!
ராகுல் காந்தி தொலைபேசி அழைப்பை ஏற்க மு.க.ஸ்டாலின் மறுப்பு? – திமுக விளக்கம்
திசை மாறிய அக்வான் புயல் :தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட மஞ்சள் அலர்ட் வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: மிக்கி மவுஸ்.. சிரிப்பின் சக்கரவர்த்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தீவிரப் புயலாக வலுப்பெற்றது 'அக்வான்'! ஆந்திராவில் கரையைக் கடக்க வாய்ப்பு - வானிலை மையம்
தொடர்ந்து சரியும் தங்கம் வெள்ளி விலை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
Shyamala Venkatraman Tips: மொறு மொறு ஓமப்பொடி!
"ஜமுனா எனக்குப் பயமா இருக்கு".. அழாதே அனாமிகா.. (பயணம் 3)
{{comments.comment}}