சென்னை:சர்வதேசப் பொருளாதாரச் சூழல் மற்றும் உள்நாட்டுச் சந்தை நிலவரங்களின் எதிரொலியாக, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (நவம்பர் 18) அதிரடியாகச் சரிந்துள்ளது. குறிப்பாக, தங்கம் விலை நடப்பு ஆண்டின் மிகக்குறைந்த அளவிற்குக் கீழே இறங்கியுள்ளது நகைப் பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம்:

கடந்த 11 மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கம் முதலே ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது அதிரடியாக குறைய துவங்கி உள்ளது. சென்னையில் கடந்த 13 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.9,360 வரை சரிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்றைய வர்த்தக நேரத் தொடக்கத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,040 குறைந்துள்ளது. இதன் மூலம், நடப்பாண்டின் மிகக்குறைந்த விலையாக ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.97,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.12, 215க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.185-க்கு விற்பனையாகிறது. அதேபோல, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.5,000 குறைந்து ரூ.1,85,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சந்தை நிலவரம் மற்றும் காரணிகள்:
சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இந்தத் தொடர் சரிவுக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.தமிழகத்தில் தற்போது சுபமுகூர்த்த மற்றும் திருமணத் தேவைகள் உள்ள நிலையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்து நடப்பாண்டின் குறைந்தபட்ச விலையை எட்டியிருப்பது சாமானிய மக்களுக்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளது. விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்ற எதிர்பார்ப்பில் நகை வாங்குவோர் தற்போதைய விலைச் சரிவைப் பயன்படுத்திக் கொள்ள நகைக்கடைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தீவிரப் புயலாக வலுப்பெற்றது 'அக்வான்'! ஆந்திராவில் கரையைக் கடக்க வாய்ப்பு - வானிலை மையம்
தொடர்ந்து சரியும் தங்கம் வெள்ளி விலை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
Shyamala Venkatraman Tips: மொறு மொறு ஓமப்பொடி!
"ஜமுனா எனக்குப் பயமா இருக்கு".. அழாதே அனாமிகா.. (பயணம் 3)
ஆல்தோட்ட பூபதி நானடா
அக்கா – என் வாழ்வின் இன்னொரு தாய்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (15)
மீனாவின் யோசனை
ஆண்டுகள் கழிந்தாலும் அன்னை மடிக்காக
வலிப்பு நோய் அல்ல.. ஆறுதலாய் பேசுங்கள்.. அரவணைப்பு காட்டுங்கள்!
{{comments.comment}}