- வீ.தமிழ்ச்செல்வி
நமக்கு கிடைத்த அந்த அமைதியான நீண்ட தூர பயணம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.. நீண்ட தூரம் நடந்து சென்று கல்வி பயின்ற அந்த நாட்கள் ஒரு அனுபவம்..
ரயிலில் சென்று கல்லூரி பயின்ற காலம் இப்போது அவசர ரயில் பயணம் ஆகிவிட்டது.. சைக்கிள் மிதித்து ஓடிய கால்கள் இப்போது குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார வைத்து விட்டது இன்றைய தொலைநுட்பம்.. ரயில் பாதையில் நண்பர்களோடு கைகோர்த்து நடந்த நாட்கள் சிறுபிள்ளைத்தனத்தின் ஆரம்பகட்டம்..
பூக்களையும் செடிகளையும் பறித்து விளையாடிய நாட்கள் அற்புதமானவை.. பழைய பை என்றாலும் கிழிந்த பை என்றாலும் அதை தைத்து பள்ளிக்கு எடுத்து சென்ற மாணவர்கள் என்றும் அந்த பள்ளியை மறப்பதே இல்லை..
இப்போதெல்லாம் எவ்வளவு படித்தாலும் போதவில்லை இன்றைய பெற்றோர்களுக்கு!! அப்பொழுதோ வீட்டுக்கு வரும் மாமா கேட்கும் ஒரு பத்திரிக்கை வாசிப்பு போதும் ஒரு கைதட்டல் பெறுவதற்கு... மூட்டை மூட்டையாய் புத்தகங்களும், நோட்டுகளும், மிகப்பெரிய அறிவியல் ஆய்வுகளும், கணித மற்றும் கணினி அறிவும் நம்மை இயல்பிலிருந்து வேறு பக்கம் திருப்பி விட்டதோ!!
ஆனால் இந்த சமூகம் அடைந்த முன்னேற்றம் வேறு வகையானது...

எப்படி ஆயினும் அன்று நமக்கு நம் அண்டை வீட்டாரோடு கிடைத்த பண்பும் பாசமும் இன்று இருக்கும் நபர்களோடு அமைவதில்லை. நடிப்பும் நாடகமும் இன்றைய மன நிலையை மாற்றி விடுகிறது..
சின்ன சின்ன குழந்தைகளை கூட தன்னந்தனியாக வீட்டில் விட முடியாத நிலைக்கு நம்மை ஆளாக்கி விட்டது.. பெரிய பெரிய குடியிருப்புகள்!!!
மனதால், அன்பினால் ஒட்ட முடியாதபடிக்கு உறவுகள் மிக தூரத்தில் நின்று விட்டன.. அவசரத்திற்கு கூட சட்டென்று குறிப்பிடும் குறளுக்கு என்னவென்று கேட்பதற்கு கூட யாரும் இல்லாத இந்த உலகத்தில் வேகவேகமாக சுழன்று தன் குடும்பத்தை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கு ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நம்பிக்கை... கண நேரத்தில் கிடைக்கும் சந்தோஷத்தை தேடி.. கண்கள் தேடல்... விடை கிடைக்காத பதிலை தேடி..
(வீ. தமிழ்ச்செல்வி, பட்டதாரி ஆசிரியர், அங்குசெட்டிப்பாளையம், பண்ருட்டி)
நீதி ஆட்சியில்!
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்.. கோதை வாழும் ஊர்.. சீரான ஸ்ரீவில்லிபுத்தூர்!
சிறு பிள்ளைகள் இன்று சிறுபிள்ளைகளாக இல்லை!
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
{{comments.comment}}