கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Nov 24, 2026,10:23 AM IST

சென்னை: கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) உறுப்பினரை இனியும் தாமதிக்காமல் உடனடியாகக் கைது செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   


நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி, இன்று (நவம்பர் 24, 2026) அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் ஆளும் அரசு மற்றும் சில அரசியல் கட்சித் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகும், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்கத்தக்கதல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். 




மேலும், இந்த விவகாரத்தில் ஆளும் அரசு நீதிமன்றத்திலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்துப் பொய் சொல்வதாகவும், இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல் என்றும் அவர் சாடியுள்ளார். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆட்சியரின் பக்கம் நின்று நீதி கேட்க வேண்டிய சில அரசியல் கட்சித் தலைவர்களின் போக்கையும் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பதவிக்காக மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காமல், தவறு செய்ததாகக் கூறப்படும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினருக்கு ஆதரவாகப் பேசி, 'அவர் பாவம்' என முட்டுக்கொடுப்பது கேவலத்தின் உச்சம் என அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.   


பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளே இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கும் போது, சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அரசியல் அழுத்தங்களுக்கோ அல்லது கூட்டணி கணக்குகளுக்கோ இடமளிக்காமல், பாதிக்கப்பட்ட தரப்பிற்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அரசு இனியும் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரை உடனடியாகக் கைது செய்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும்" என மு.க.ஸ்டாலின் தனது பதிவில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவரின் இந்தக் காட்டமான அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் : நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு வீட்டு காவல்

news

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

news

பெண் கலெக்டருக்கு எஸ்எம்எஸ் : தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்

news

திருப்பரங்குன்றம் மகாதீபத் திருவிழா: மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்

news

Chennai Rains: சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை: நாளையும் மழை தொடரும் என எச்சரிக்கை

news

பெண் கலெக்டருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு!

news

திருநெல்வேலியில் "இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை" துவக்கம்: வைரலாகும் புதிய இயக்கம்!

news

ஆசியாவில் கெத்து காட்டும் இந்தியா: 'டஃப்' கொடுக்கும் பிரதமர் மோடி

news

மகா திருக்கார்த்திகையன்று எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்.. திருக்கார்த்திகை தீப சிறப்புகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்