டெல்லி: ஆசிய கண்டத்தின் பவர் பாலிடிக்ஸில் இந்தியா தனது இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'லோவி இன்ஸ்டிடியூட்' (Lowy Institute) வெளியிட்டுள்ள 2026 ஆசியா சக்தி குறியீட்டு அறிக்கையின்படி, ஆசியாவின் 3-வது பெரிய சக்தியாக உருவெடுத்து, இந்தியா மாஸ் காட்டியுள்ளது.
அதுமட்டுமல்ல, ஆசியாவிலேயே மிகவும் திறம்படச் செயல்படும் தலைவர்கள் பட்டியலில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாக 2-வது இடத்தைப் பிடித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
2018-ம் ஆண்டு இந்தப் பட்டியல் போட ஆரம்பித்ததிலிருந்து, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சக்தி இடைவெளி இப்போதுதான் ரொம்பவே குறைந்திருக்கிறது. என்னதான் சீனா நம்மை விட 80 சதவீதம் அதிக பலத்துடன் இருந்தாலும், 40.5 புள்ளிகளுடன் "நாங்களும் பெரிய பிளேயர் தான்" என்று இந்தியா கெத்தாக நிரூபித்துள்ளது.
இந்த ஆய்வின் திட்டத் தலைவர் டாக்டர் ஹண்டர் மார்ஸ்டனும் இதைத்தான் சொல்கிறார்: "பொருளாதாரத் திறனில் சின்ன சறுக்கல் இருந்தாலும், இந்தியா தன் செல்வாக்கை நல்லாவே வளர்த்திருக்கு. 2018-க்கு அப்புறம் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இடைவெளி ரொம்பக் குறைஞ்சிருக்கு; ஜி ஜின்பிங்கிற்கு அடுத்து ஆசியாவின் சிறந்த தலைவர் மோடிதான்" என்று பாராட்டியுள்ளார்.
பிரம்மோஸ் ஏவுகணையால் எகிறிய மவுசு!

மொத்தம் 27 நாடுகளை வைத்து, 131 விஷயங்களை அலசி ஆராய்ந்து இந்த ரிப்போர்ட்டை ரெடி பண்ணியிருக்கிறார்கள். இதில் 8 முக்கிய பிரிவுகளில் 5 பிரிவுகளில் இந்தியா 'அப்' ஆகியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நாம் போட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களும், நம் பிரம்மோஸ் (BrahMos) ஏவுகணை விற்பனையும் பாதுகாப்பு வலைப்பின்னலில் இந்தியாவை 9-வது இடத்திற்கு தூக்கிவிட்டுள்ளது.
நம்முடைய கலாச்சாரம், தகவல் பரிமாற்றம், மக்கள் தொடர்பு என எல்லாவற்றிலும் இந்தியா ஸ்கோர் செய்து, கலாச்சார செல்வாக்கில் 43.8 புள்ளிகளை அள்ளியுள்ளது.
உலக நாடுகள் பலவும் தடுமாறிய நேரத்திலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மட்டும் அசராமல் ஸ்ட்ராங்காக நின்றுள்ளது.
எல்லாம் பாசிட்டிவாக இருந்தாலும், சில மைனஸ் பாயிண்டுகளையும் அறிக்கை சுட்டிக்காட்டத் தவறவில்லை. ரூபாய் மதிப்பு கொஞ்சம் வீக் ஆனது, வெளிநாட்டு முதலீடுகளில் சுமார் 20 பில்லியன் டாலர் குறைந்தது ஆகியவை சின்ன பின்னடைவுதான்.
அதேபோல, வளைகுடா மோதலின் போது இந்தியா கொஞ்சம் அமைதி காத்ததால், பிரதமர் மோடியின் சர்வதேச வியூகம் குறித்த பார்வையில் சின்ன மாற்றம் தெரிந்ததாகவும் சொல்கிறார்கள்.
ஆனாலும், "மற்ற ஆசிய நாடுகளை ஒப்பிடும்போது, வளர்வதற்கான வாய்ப்புகள் இந்தியாவுக்குத்தான் எக்கச்சக்கமாக இருக்கு" என்று அறிக்கை பச்சைக்கொடி காட்டியுள்ளது.
டிரம்ப் கவனத்தைத் திருப்ப, 'டிராகன்' போட்ட ஸ்கெட்ச்!
இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்திய கிழக்கு விவகாரங்களில் ரொம்பவே பிஸியாகிவிட்டதால், ஆசியா பக்கம் அமெரிக்காவின் கவனம் கொஞ்சம் குறைந்துள்ளது. இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சீனா, ராணுவ பலத்தில் அமெரிக்காவுக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டது.
இப்போது அமெரிக்கா 78.9 புள்ளிகளும், சீனா 73.6 புள்ளிகளும் வைத்துள்ளன. இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 5.3 புள்ளிகள்தான்! அமெரிக்காவை விட மூன்று மடங்கு அதிக கையிருப்புப் பணத்தை வைத்துக்கொண்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் பகுதிகளில் தன் கடற்படை பலத்தை சீனா தொடர்ந்து அதிகரித்து வருவது உலக அரசியலில் பெரிய விவாதமாகியுள்ளது.
எது எப்படியோ இந்தியா வலுவாகி வருகிறது. நமக்கு அதுதான் மேட்டர்.. காலரைத் தூக்கி விட்டுக்குவோம்.
Chennai Rains: சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை: நாளையும் மழை தொடரும் என எச்சரிக்கை
பெண் கலெக்டருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு!
திருநெல்வேலியில் "இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை" துவக்கம்: வைரலாகும் புதிய இயக்கம்!
ஆசியாவில் கெத்து காட்டும் இந்தியா: 'டஃப்' கொடுக்கும் பிரதமர் மோடி
மகா திருக்கார்த்திகையன்று எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்.. திருக்கார்த்திகை தீப சிறப்புகள்
இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு: சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஆன்லைன் முன்பதிவில் புதிய கட்டுப்பாடு
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை விவகாரம்: அரசு தலைமை வழக்கறிஞருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!
திருப்பரங்குன்றம் விவகாரம்: மதுரையில் பேரணி,போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
{{comments.comment}}