தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

Sep 25, 2026,03:29 PM IST

- கவிஞர் மல்லிகா செல்வராஜ்


தமிழ் வருடத்தின் அங்கங்களும், 

தமிழ் குடும்பத்தின்

அங்கங்களும் 

இணைந்த அணிவகுப்பு.


சித்திரை வந்தது சித்தி சித்தி!!

மதுரை பாக்கலாம் 

சுத்தி சுத்தி!!


வைகாசி வந்தது 

அக்கா அக்கா!!

வை காசு கையிலே

அக்கா மக்கா!!




ஆனி வந்தது அண்ணி அண்ணி!!

மேனி எங்கும் மின்னி மின்னி!!


ஆடி வந்தது பாட்டா பாட்டா!!

பட்டம் விடலாம் பட்டு பட்டா!!


ஆவணி வந்தது மதினி மதினி!!

பிள்ளையாரு வாராரு 

பவனி பவனி!!


புரட்டாசி வந்தது பாட்டி பாட்டி!!

பதுமை அடுக்குவோம் 

புதுமையாக!!


ஐப்பசி வந்தது பேரா பேரா!!

பட்டாசு வாங்கனும் 

செட்டு செட்டா!!


கார்த்திகை வந்தது 

பேத்தி பேத்தி!!

காபியை குடுமா ஆத்தி ஆத்தி!!


மார்கழி வந்தது 

பக்கத்தில!!

கோலம் போடனும் 

முத்தத்தில!!


தை பொறந்தது அத்தை அத்தை!!

உந்தன் மடி என்றும் 

மெத்தை மெத்தை!!


மாசி வந்தது மச்சான் மச்சான்!!

பேசிக்கிட்டே ஒரு கொட்டு வச்சான்!!


பங்குனியில் வந்த 

சொந்த பந்தம்!!

பத்து வித பலகாரம் 

நித்தம் நித்தம்!!


(கவிஞர் மல்லிகா செல்வராஜ், தித்திக்கும் சத்தான கடலை மிட்டாய்க்குப் பெயர் போன கோவில்பட்டியில் வசிக்கும் பல்கலை வித்தகர், மல்லிகை மலர் போன்று வெள்ளை மனமும், மென்மை குணமும் கொண்ட மங்கை இவர்!! இயற்கையை நேசித்து, எழுத்துக்களை வாசித்து, நேசத்தை சுவாசித்து வாழும் நங்கை இவர்! இனிய இல்லத்தரசி! கவிதைகள் புனைவது, திரையிசைப் பாடலின் மெட்டிற்கு ஏற்ற சந்தங்கள் அமைத்து சொந்த வரிகளில் இசைபடிக்கும் வல்லமை பெற்றவர்!)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்