திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

Sep 25, 2026,04:51 PM IST
ஆத்தூர்: திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகள் இடையே ரகசிய கூட்டணி உள்ளதாக மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் பேசி உள்ளார்.

டில்லியில் உள்ள திமுக தான் பாஜக, தமிழகத்தில் உள்ள பாஜக தான் திமுக என்றும் திமுக.,வை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். அதே போல் ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வியையும் முதல்வர் விஜய் முன் வைத்துள்ளார்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026:

மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் வரும் அக்டோபர் 06ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர், இடதுசாரிகள் என ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. தவெக சார்பில் அதிமுக.,வில் இருந்து விலகி, தவெக.,வில் இணைந்த மரகதம் குமாரவேல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இவரை ஆதரித்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் பகுதியில் அவர் இன்று பிரச்சாரம் செய்தார். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து தனது பிரச்சாரத்தை துவக்கினார் விஜய்.

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தின் போது பேசிய விஜய், " நான் முதலமைச்சராக வரவில்லை. எப்போதும் போல் உங்கள் வீட்டு பிள்ளையாக, உங்கள் மகனாக, உங்கள் தம்பியாக, உங்களின் ஒருவனாக, உங்கள் விஜய்யாக ஓட்டு கேட்டு வந்துள்ளேன். 

தமிழகத்தில் ஆபாச நதி ஓடிக் கொண்டிருக்கிறது. திமுக தலைவர் முதல் நிர்வாகிகள் வரை பெண்கள் பற்றி அவதூறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் அவர் எப்போதுமே என்னுடைய ஸ்வீட் அங்கிள். 

மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் கடன் வாங்குகிறேன்:



மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் கடன் வாங்குகிறேன். கொள்ளையடிப்பதற்கு அல்ல. நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. என்னால் முடிந்தவற்றை செய்து வருகிறேன். கொடுத்த வாக்குறுதிகளை கொஞ்சமாவது நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தான் 6 சிலிண்டர்கள் என சொல்லியதில் 3 சிலிண்டர்களை கொடுத்துள்ளோம்.

மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக திமுக.,வும் அதிமுக.,வும் இணைந்து ரகசிய கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முயற்சித்தனர். பாஜக.,வின் கிளையாக இருந்த அதிமுக, தற்போது திமுக.,வின் கிளை கழகமாக மாறி விட்டது. தவெக.,க்கு ஆட்சிக்கு வந்து விட்டால் இவர்களால் ஊழல் செய்ய முடியாது, கொள்ளையடிக்க முடியாது என்பதால் தவெக.,வை பற்றி தொடர்ச்சி ஆபாசமாக பேசி வருகிறார்கள்.

சட்டசபையில் நான் ஊழல் என்றாலே ஆதாரம் கேட்கிறார்கள். ஆதாரம் காட்டினால், அது கோர்ட்டில் நிரூபிக்கப்படவில்லை என்கிறார்கள். என்னை பேச விடக் கூடாது என்பது தான் அவர்கள் நோக்கம். டில்லியில் உள்ள திமுக தான் பாஜக, தமிழகத்தில் உள்ள பாஜக தான் திமுக. இரண்டுமே ஒன்று தான். உங்களுக்கு தைரியம் இருந்தால் திமுக, அதிமுக, பாஜக மூன்றும் ஒன்று தான் என வெளிப்படையாக சொல்லி களத்தில் போட்டியிட வேண்டியது தானே?

உங்கள் சொந்த பணத்திலா கட்டினீர்கள்?

நாங்கள் கட்டிய பாலத்தில் நின்று விஜய் ஷூட்டிங் நடத்துகிறார் என்கிறார்கள். அந்த பாலத்தை நீங்கள் உங்கள் சொந்த பணத்திலா கட்டினீர்கள்? உங்களிடம் ரூ.10,000 தான் பணம் உள்ளது. கார் கூட கிடையாது. இதை வைத்து எப்படி பாலம் கட்டினீர்கள்? அந்த பணம் எப்படி, எங்கிருந்து வந்தது? 

என்னை பெற்ற தாயை பற்றி அசிங்கமாக பேசியதை கூட பொறுத்துக் கொண்டேன். இது போல் பல விமர்சனங்களை பார்த்து விட்டு தான் நான் இங்கு வந்திருக்கிறேன். உங்கள் பாட்சா எதுவும் என்னிடம் பலிக்காது. ஆனால் தமிழகத்தில் உள்ள பெண்களை அசிங்கமாக பேசினால் நான் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டேன்.

பல வருடங்களாக ஒருவன் பச்சிளம் குழந்தைகளை சீரழித்துக் கொண்டிருக்கிறான். அதை மூடி மறைத்துள்ளார்கள். நாங்கள் தப்பு செய்தவர்களை கைது செய்துள்ளோம்.

ஸ்டாலின் சார் இதில் கூட வாய் திறக்க மாட்டீங்களா? வாய திறங்க சார்... திமுக மட்டுமல்ல அவர்களுடன் ரகசிய கூட்டணி வைத்திருப்பவர்களும் வாய் திறக்கவில்லை. இதில் கூடவா கூட்டணி? இவ்வாறு முதல்வர் விஜய் கடுமையாக தாக்கி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?

news

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

news

Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!

news

தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

news

என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

news

தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்