- பசுங்கிளி
தீபாவளி என்றாலே நம் நினைவிற்கு வருவது பலகாரங்களின் மணமும், அதிலும் குறிப்பாகப் பட்டாசுகளின் வெடிச் சத்தத்திற்குப் போட்டியாகக் கேட்கும் முறுக்கின் மொறுமொறு சத்தமும்தான்!
கடைகளில் வாங்கும் முறுக்கை விட, நம் கையாலேயே பக்குவமாகச் செய்து, சுடச்சுடச் சுவைப்பதில் கிடைக்கும் ஆனந்தமே தனி. அதிலும் நாம் செய்யும் முறுக்கு எண்ணெய் குடிக்காமல், சாப்பிடும்போது வாயில் கரையும் பக்குவத்தில் வந்தால் அந்தச் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது.
அதான் தீபாவளி முடிஞ்சு போச்சேன்னு கேக்கறீங்களா.. அட அதனால் என்னங்க.. எப்ப வேணும்னாலும் செஞ்சு சாப்பிடலாமே.. வாங்க அட்டகாசமான 'மொறுமொறு முறுக்கு' எப்படிச் செய்வது என்று பார்ப்போம்!
.webp)
தேவையான பொருட்கள்
1. அரிசி மாவு – 1 கிலோ
2. பொட்டுக்கடலை – 1/4 கிலோ
3. மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
4. உப்பு – தேவையான அளவு
5. எள்ளு – 1 டீஸ்பூன்
6. ஓமம் – 1 டீஸ்பூன்
7. வெண்ணெய் – 100 கிராம்
8. எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
1. முதலில் பொட்டுக்கடலையை மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து, கட்டிகள் ஏதுமின்றி சல்லடையைக் கொண்டு நன்றாகச் சலித்துக் கொள்ளவும்.
2. ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.
3. உப்பு கரைந்தவுடன், சலித்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், எள்ளு மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை அதனுடன் சேர்த்துச் சப்பாத்தி மாவை விடச் சற்றுத் தளரப் பிசைந்து கொள்ளவும்.
4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காய விடவும்.
5. முறுக்கு அச்சில் பிசைந்த மாவை நிரப்பவும்.
6. ஒரு தட்டின் பின்புறத்தில் சிறிதளவு எண்ணெய் தடவி, அதன் மீது முறுக்கை வட்டமாகப் பிழிந்து கொள்ளவும் (அல்லது நேரடியாகக் கரண்டியில் பிழிந்து கொள்ளலாம்).
7. பிழிந்த முறுக்கைச் சூடான எண்ணெயில் மெதுவாக விடவும்.
8. அடுப்பை மிதமான தீயில் வைத்து, முறுக்கு இரண்டு பக்கமும் நன்றாக வெந்து, 'பபுள்ஸ்' (எண்ணெய்க் குமிழிகள்) அடங்கிப் பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து எடுக்கவும்.
அடடா... மணம் பரப்பும் அந்தச் சுவையான, மொறுமொறுப்பான முறுக்கு தயார்! மாலை நேரத் தேநீருடன் இந்த முறுக்கைச் சுவைப்பது அலாதியான சுகம். செஞ்சு சாப்பிடுங்க மக்களே!
சங்கராபுரம் மாணவியின் சாதனை.. கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா பாராட்டு!
சுடச்சுட மொறுமொறு முறுக்கு.. தீபாவளி முடிஞ்சாலும் செஞ்சு சாப்பிடலாமே!
கந்த சஷ்டி விரதம் 2026 - செவ்வாய்க்கிழமை முதல் களை கட்டும் முருகன் கோவில்கள்!
நற்பெயருடன் வாழ்வோம்.. திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (3)
சீலா மீனும்.. ஜோ தீபாவளியும்!
சோதனையை சாதனையாக்கு!
ஸ்டார்!
Returns of the Day: பிறந்த நாள் வாழ்த்து ஜாக்கிரதை!
பண்டிகை.. ஒரு நிமிடக் கதை (53)
{{comments.comment}}