கம்பம்: தேனி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவி வர்ஷா 1330 திருக்குறளையும் மஞ்சள் நிற அட்டையில் வள்ளுவர் திருவுருவம் வருவது போல எழுதி சாதனை படைத்துள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் திருமதி ரேகா. இவர் தன்னுடைய மாணவர்களை ஒழுக்கமாகவும் கல்வி அறிவில் சிறந்தவர்களாகவும் வளர்க்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் அனைவரையும் திருக்குறள் படிக்கவும் அதன்படி நடக்க உறுதிமொழி எடுக்கவும் ஊக்குவித்து வருகிறார்.
இவருடைய மாணவிகளில் ஒருவரான எட்டாம் வகுப்பில் பயிலும் வர்ஷா 1330 திருக்குறளையும் மஞ்சள் நிற அட்டையில் வள்ளுவர் திருவுருவம் வருவது போல எழுதியுள்ளார். பள்ளி முடிந்து வீட்டில் ஓய்வு நேரத்தில் இதை இவர் மூன்றே நாட்களில் செய்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் மாணவி செல்வி வர்ஷாவைப் பாராட்டி சால்வை அணிவித்துச் சிறப்பித்தார்.
அந்த மஞ்சள் நிற அட்டையைப் பார்க்கும்போது திருவள்ளுவர் உருவம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. அதில் வரிகளோ கோடுகளோ இல்லாமல் திருக்குறளையே பொடி எழுத்துகளில் எழுதி அந்த வள்ளுவர் உருவத்தை ஒரு உலக சாதனையாக செய்துள்ளார் என்று சென்னையில் உள்ள சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா அவரைப் பாராட்டியுள்ளது.
மேலும் செல்வி வர்ஷாவின் செயலைச் சிறப்பித்து விரைவில் அவருக்கு உலக சாதனை சான்றிதழையும் இவருடைய ஆசிரியர் திருமதி ரேகாவின் ஊக்குவிப்பைப் பாராட்டி சீர்மிகு ஆசிரியர் விருதையும் வழங்க உள்ளது.
சங்கராபுரம் மாணவியின் சாதனை.. கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா பாராட்டு!
சுடச்சுட மொறுமொறு முறுக்கு.. தீபாவளி முடிஞ்சாலும் செஞ்சு சாப்பிடலாமே!
கந்த சஷ்டி விரதம் 2026 - செவ்வாய்க்கிழமை முதல் களை கட்டும் முருகன் கோவில்கள்!
நற்பெயருடன் வாழ்வோம்.. திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (3)
சீலா மீனும்.. ஜோ தீபாவளியும்!
சோதனையை சாதனையாக்கு!
ஸ்டார்!
Returns of the Day: பிறந்த நாள் வாழ்த்து ஜாக்கிரதை!
பண்டிகை.. ஒரு நிமிடக் கதை (53)
{{comments.comment}}