- அ.சுபாலட்சுமி
"போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை" என்ற சொலவடை, காலப்போக்கில் திரிந்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு பழமொழியாகும். இதன் சரியான உண்மையான பழமொழி மற்றும் பொருளை இப்போது பார்ப்போம்.
சரியான பழமொழி:
"வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை, போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை"
இதன் விளக்கம் என்னவென்றால்..

வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை: பேச்சாற்றல், மொழித்திறன் மற்றும் கல்வி அறிவை (வாக்கு) நன்கு கற்றுக் கொண்டவர் மாணவர்களுக்குக் கற்பிக்கும் 'வாத்தியார்' வேலைக்குத் தகுதியானவர்.
போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை: மனிதர்களின் நடத்தை, குற்றப்பாதைகள், ஊரின் போக்கு மற்றும் குற்றவாளிகளின் வழிமுறைகளை (போக்கு) நன்கு அறிந்தவர் குற்றங்களைத் தடுக்கும் 'போலீஸ்' வேலைக்குத் தகுதியானவர்.
காலப்போக்கில் இது வாய்மொழியாகப் பரவியபோது, "வாக்கு கற்றவனுக்கு" என்பது "வக்கத்தவனுக்கு" என்றும், "போக்கு கற்றவனுக்கு" என்பது "போக்கத்தவனுக்கு" என்றும் மருவி தவறான பொருளைத் தந்துவிட்டது. அதாவது திறமையற்றவர்களுக்குரிய வேலைகள் என்ற பொருளில் இன்று தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
இனியாவது நாம் சரியான பொருளில் இதைப் பயன்படுத்துவோம்.
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)
வீணை மீட்டும் கைகளே.. பேபி காயத்ரியாக புறப்பட்டு.. வீணை இசையில் உச்சம் தொட்டவர்!
"போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை" .. உண்மை அர்த்தம் என்ன?
வறுமையின் கண்ணீரில் நனைந்த குழந்தைப் பருவம்.. வேரில் இருந்து விழுது வரை (பகுதி 2)
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை!
சங்கராபுரம் மாணவியின் சாதனை.. கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா பாராட்டு!
சுடச்சுட மொறுமொறு முறுக்கு.. தீபாவளி முடிஞ்சாலும் செஞ்சு சாப்பிடலாமே!
கந்த சஷ்டி விரதம் 2026 - செவ்வாய்க்கிழமை முதல் களை கட்டும் முருகன் கோவில்கள்!
நற்பெயருடன் வாழ்வோம்.. திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (3)
சீலா மீனும்.. ஜோ தீபாவளியும்!
{{comments.comment}}