- பசுங்கிளி இளங்கோவன்
இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை. இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்திருக்கும் ஆண்டாள் ரங்கமன்னாரை பற்றி தெரிந்து கொள்வோம். ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை பிறந்த ஊர். கோவிந்தன் வாழும் ஊர். ஸ்ரீவில்லி புத்தூர் வைணவ சமயத்தில் மிகச்சிறப்பு பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த பெருமாள் வடபத்ரசாயி, ரங்கமன்னார் வடபெருங்கோயிலுஉடையான் என்று அழைப்பது வழக்கம். வடபத்ர சாயி என்ற நாமத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அவருடன் ஸ்ரீ தேவி பூதேவி தாயார்களும் அருள் பாலிக்கின்றனர். இந்த தலத்தில் இன்னொரு பெரிய சிறப்பு ஆண்டாள், பெரியாழ்வார் தினமும்
பெருமாளுக்கு மாலைகளை தொடுத்து வழிபட்டு வந்தார். ஒருநாள் துளசி செடியின் அடியில் ஒரு பெண் குழந்தையை கண்டெடுத்தார். அந்த குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு வளர்த்தார்.
நந்தவனத்தில் கோதையோடு சென்று பூக்களை பறித்து வந்து மாலையாக கோர்க்கும் பொழுது பெரியாழ்வார் கோதைக்கு பெருமாளின் பாடல்கள் கதைகள் சொல்லிக்கொண்டேமாலைகள் தொடுப்பார். கோதைக்கு சிறு வயது முதலே பெருமாள் மீது அளவற்ற பக்தி பெரியவளான பிறகு தன் கைகளில் மாலை கோர்த்து தானே அதை
சூட்டிக் கொண்டு அங்கு உள்ள கிணற்றின் நீரில் தன் அழகை பார்த்து விட்டு பெருமாளுக்கு சூட கொடுப்பாள். அந்த மாலையை பெருமாளுக்கு சாத்துவார்கள். அதனால் கோதைக்கு சூடிக்கொடுத்த சுடர்கொடி என்ற பெயரும் உண்டு.

அந்த கிணறு இன்றும் இருக்கிறது. கோவிலுக்கு செல்பவர்கள் பார்க்கலாம். கோதையானவள் தன் தீராத பக்தியால் அந்த ஆண்டவனை ஆட்கொண்டதால் ஆண்டாள் என்ற பெயர் நிறுவப்பட்டது. ஆண்டாள், அருளிய திருப்பாவை 30 பாசுரங்களை கொண்டது. மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடுவது இன்றளவும் வைணவ கோயில்களில் சிறப்பாக நடைபெறுகிறது. அவர் எழுதிய மற்றொரு படைப்பு நாச்சியார் திருமொழி.
ஆண்டாள் தீராத பக்தியினால் ரங்கநாதரை மணந்தார். ஸ்ரீவில்லி புத்தூரின் கோயிலின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்று அதன் அழகிய ராஜ கோபுரம். 192 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் தமிழ் நாட்டின் மிகப் பெரிய கோபுரங்களில் ஒன்று, தமிழக அரசின் சின்னத்திலும் இந்த கோபுரம் உருவம் இடம் பெற்றுள்ளது.
இங்கு ஆடி மாதம் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். ஆடி பூர நட்சத்திரத்தில் அவள் அவதாரத்தை கொண்டாடும் இந்த விழாவில் பல மாநிலத்தில் இருப்பவர்களும் வந்து கலந்து கொண்டு கண்டு களிப்பார்கள். ஆண்டாளும் பெருமாளும் தேரில் அமர்ந்து வரும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும். விருதுநகர் மாவட்டம் முழுக்க அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்படும்.
தேரின் மேல் அமர்ந்து இருப்பவர்கள் ஆடி வரும் தேரை காண வாரீர் என்று அழைப்பார். பக்த கோடிகள் கோவிந்தா கோபாலா என்று கோஷமிடுவார்கள். அதைக் காணக் கண் கோடி வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சாத்தி மகிழ்ந்த மாலையை திருப்பதி ஏழுமலையானுக்கு படைக்கும் அழகான பாரம்பரியம் புரட்டாசி பிரம்மோற்சவ காலத்தில் மிக சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத கருட சேவையை ஒட்டி இந்த மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து விமானம் மூலம் திருப்பதிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
2026-இல் செப்டம்பர் 17-ஆம் தேதி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதி ஏழுமலையானுக்கு சென்றடையும். திருமலையில் மாலைக்கு சிறப்பு பூஜை செய்து வாத்திய கோஷங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். கருட சேவை நாளில் ஏழுமலையானுக்கும் மலையப்ப சாமிக்கும் ஆண்டாள் மாலை சாத்தப்படுகிறது.
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை என்பது வெறும் ஒரு அலங்காரப் பொருள் அல்ல, அது பக்தியின் உச்சமான அடையாளம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அந்த மாலை ஆண்டாளின் திருக்கரங்களால் அலங்கரிக்கப்பட்டு பாசத்தோடும் பக்தியோடும்
பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படபவதாக ஐதீகம். இந்த புரட்டாசி சனிக்கிழமை நாளில் நாமும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்க மன்னாரை வணங்கி இறைவன் அருள் பெறுவோம்.
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்,
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
ஓம் நமோ நாராயணா
நீதி ஆட்சியில்!
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்.. கோதை வாழும் ஊர்.. சீரான ஸ்ரீவில்லிபுத்தூர்!
சிறு பிள்ளைகள் இன்று சிறுபிள்ளைகளாக இல்லை!
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
{{comments.comment}}