சேலம்: முருகன் கோவில்களில் மகா கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இன்று மகா கந்த சஷ்டி விரதத்தின் இரண்டாம் நாள். இப்பதிவில் சேலம் மாநகரில் அமைந்துள்ள கந்தாஸ்ரமம் திருக்கோவிலை பற்றிய தகவல்களை பார்ப்போம். கந்த குரு கவசம் இயற்றப்பட்ட ஸ்தலம் -கந்தாஸ்ரமம். கந்த குரு கவசத்தை இயற்றிய ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் சேலத்தில் உள்ள கந்தாஸ்ரமத்தை நிறுவியவர் ஆவார்.
சேலம் சுற்றுப்புறத்தில் மலைகளுக்கு மத்தியில் அமைதியான சூழலில் கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது. இக்கோவிலில் கந்தன் மற்றும் பிற தெய்வங்கள் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. இக்கோவில் சேலம் நகரத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் சேலம் to ஆத்தூர் சாலையில் உள்ள உடையாபட்டியில் உள்ளது. இது ஸ்கந்தகிரி என்ற சிறிய குன்றின் மேல் அமையப்பெற்றுள்ளது. இரண்டு சிறிய கொண்டை ஊசி வளைவுகள் கோவிலின் பிரதான நுழைவாயிலுக்கு அழைத்துச் செல்கிறது. கந்தாஸ்ரமம் உடையாப்பட்டியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமையப் பெற்றுள்ளது.
இங்கு அமையப்பெற்றுள்ள ஆசிரமம் ஸ்கந்தாஸ்ரமம். 1971 ஆம் ஆண்டு ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளால் நிறுவப்பெற்றது. அவரது கனவில் முருகப்பெருமான் தோன்றி இங்குள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரை நிறுவுமாறு பணித்தார். முருகப்பெருமான் சுட்டிக்காட்டி இடத்தை தேடி கடைசியில் இந்த இடத்தை கண்டுபிடித்தார்.அவர் எளிமையான கட்டமைப்புகளுடன் கோவிலைத் தொடங்கினார். இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பாங்கான அமைதியாக நிலவும் சூழலில் அமைக்கப்பட்டுள்ளது.

ஜருகுமலை எனும் மலையின் தீவிர வடக்கு முனையில் கன்னிமார் ஓடை எனப்படும் ஓடையின் கரையில் அமைந்துள்ளது.இங்கு அமையப்பெற்றுள்ள முதன்மை தெய்வங்கள் கந்தன் மற்றும் அஷ்டா தசபுஜ மகாலட்சுமி துர்கா பரமேஸ்வரி. இக்கோவில் ஓம் ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளால் மே 1968இல் திட்டமிடப்பட்டது. அவர் ஸ்கந்தாஸ்ரமம் என்ற பெயரில் ஒரு கோவிலின் வடிவத்தில் செயல்படுத்தினார். மற்றும் அதன் மகா கும்பாபிஷேகம் 08.02.1971 ஆம் ஆண்டு நடைபெற்றது .
இக்கோவிலின் வளாகத்தில் சதாசிவசுவாமி மற்றும் ஸ்வயம் பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமி அவதூத வரிசையில் இரண்டு புகழ்பெற்று துறவிகள் மற்றும் நிறுவனரின் குருக்களான சன்னதிகளும் உள்ளன. விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயர்,பஞ்சமுக கணபதி நேருக்கு நேராக காட்சி அளிக்கின்றனர். 6 அடி உயரமுள்ள தன்வந்திரி பகவான் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்வை அருளுகிறார்.
தத்தாத்ரேயர் 16 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட சிலைகளாக அமையப் பெற்றுள்ளது. இங்குள்ள ஹனுமான் -ஆஞ்சநேயர், நரசிம்மர்,கருடன்,வராக மற்றும் ஹயக்ரீவர் ஆகியோரின் முகங்களை தாங்கியவர். மற்றும் இடும்பன் 13 அடி சிலையாக அமையப்பெற்றுள்ளது. ஸ்வர்ணாகர்ஷ பைரவரும் அருள் பாலிக்கிறார். சிவன் கோவிலும் உள்ளே அமையப்பட்டுள்ளது. சண்டி ஹோமம் நடத்தப்படும் ஹோம மண்டபம் இங்கு அமைய பெற்றுள்ளது. ஸ்கந்த பெருமானுக்கு வலப்பக்கம் விநாயகர் சன்னதியும்,இடப்பக்கம் ஐயப்பன் சன்னதியும் அமைய பெற்றுள்ளது.
ஸ்கந்தனின் உருவம் மிகவும் அழகு. 18 கரங்களைக் கொண்ட அம்பாளின் உருவம் இவ்விரண்டும் நேருக்கு நேராக அமையப்பெற்றுள்ளதுவேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பான அமைப்பாகும். இந்த கல் சிலைகள் கலைத்தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
இக்கோவிலில் உள்ள தனிச்சிறப்பு என்னவெனில் நவக்கிரகங்கள் தங்கள் துணைவியருடன் ஸ்கந்தப்பெருமானை சுற்றி அமையப்பெற்றுள்ளது. நான்கு வேதங்களின் உருவங்களும் உள்ளன. இந்த திருக்கோவிலில் அர்ச்சனை முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு புகழ்பெற்ற முனிவர்கள் மற்றும் துறவிகளின் சிலைகளுக்காக இங்கு ஒரு சிறப்பு மண்டபம் அமையப் பெற்றுள்ளது.
தரிசன நேரம்:
தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மதியம் 12 :00மணிக்கு உச்சிக்கால பூஜை நடைபெறுகிறது.மாலை 4:00 மணி முதல் இரவு 9:30 மணி வரையிலும் இக்கோவில் நடை திறந்திருக்கும்.
விசேஷ நாட்கள்:
ஒவ்வொரு செவ்வாய் கிழமையும்,கிருத்திகை, வைகாசி விசாகம்,ஷஷ்டி மற்றும் மகா கந்தசஷ்டி, கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் நவகிரகங்களுக்கும் முருக பெருமானுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
பலன்கள்:

ஸ்கந்த பெருமானைச் சுற்றியும் ஒன்பது கிரகங்களும் தங்களது துணைவியருடன் அருள்பாளிக்கின்றனர். ஜோதிட சாஸ்திர விதிகளின்படி மூலவரான ஞான ஸ்கந்த குருநாதரை சுற்றி நவகிரகம் மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முருகப்பெருமானே நவகிரகங்களை கட்டுப்படுத்தும் நாயகனாக இருப்பதால் இங்கு வழிபடுவது கிரக தோஷங்களை நீக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஜாதகத்தில் உள்ள நவகிரக தோஷங்கள், திருமண தடைகள், குழந்தை பாக்கியமின்மை மற்றும் குரு பகவானின் அருள் கிடைக்க பக்தர்கள் இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இவர்களைச் சுற்றி வந்து வழிபட குடும்ப ஒற்றுமை தம்பதியர் நலன் பெருகும்.
காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறும் நித்திய அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
மகா கந்த சஷ்டி விரத நாட்களில் ஏராளமான பக்தர்கள் கந்தாஸ்ரமம் சென்று வழிபாடுகள் செய்கின்றனர்.
"கந்தனை நம்பினோர் கைவிடப்படார்."
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
மகா கந்தசஷ்டி விரதம் 2ம் நாள் - சேலம் கந்தாஸ்ரமம் திருக்கோயில் மகிமை!
நடிகை பிரியா பவானி சங்கர் திருமணம்...நீண்ட கால நண்பரை கரம்பிடிக்கிறார்
நவம்பர் 11 .. தேசிய கல்வி தினமாக கொண்டாடுவது ஏன்?
நெஞ்சு பொறுக்குதில்லை!
My Lost Doll
கை பிடித்து நடக்கும் போதெல்லாம்.. அப்பா!
முப்பதைக் கடந்த மனதின் புரிதல்கள்!
சிவப்பு ரோஜாக்கள்!
தென்தமிழ் தலையங்கம்: "எனக்கு நானே ராஜா!" - சிங்கிள்ஸ் கொண்டாடும் நவம்பர் 11 தின சுவாரஸ்ய வரலாறு!
{{comments.comment}}