பெண் ஆட்சியருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினேனா?: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுப்பு

Nov 10, 2026,01:23 PM IST

சென்னை: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாகத் எழுந்த புகாருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) அருள் விக்னேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். தன் மீதும் கட்சி மீதும் களங்கம் கற்பிப்பதற்காகவே எதிர்க்கட்சியினர் இத்தகைய அவதூறுகளைப் பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.   


சர்ச்சையின் பின்னணி:


கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பெண் ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தகவல்கள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளான நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுத்துள்ளார்.


“அதிகாரிகள் மீது பெரும் மரியாதை உண்டு”




செய்தியாளர்களிடம் பேசிய அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ, "அரசு அதிகாரிகள் மீது எனக்கு எப்போதுமே பெரும் மரியாதையும் மதிப்பும் இருக்கிறது. அதுபோன்ற ஒரு மோசமான செயலை நான் ஒருபோதும் செய்யவில்லை. என் மீது ஏன் இது போன்ற தவறான வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை" என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். தொடர்ந்து பேசிய அவர், "எதிர்க்கட்சியினருக்கு என் மீதும், எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் கடுமையான வன்மமும் காழ்ப்புணர்ச்சியும் உள்ளது. அதன் காரணமாகவே எங்களைக் குறிவைத்து, திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கில் இந்த பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். ஆனால், உண்மை என்ன என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்; மக்கள் எப்போதும் எங்கள் பக்கமே இருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டார்.   


“தவறு செய்ய மாட்டோம் - சட்டம் நடவடிக்கை பாயும்”


மேலும், "இது தவெகவின் ஆட்சிக் காலம். நாங்கள் கண்டிப்பாக ஒருபோதும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட மாட்டோம்" என்று உறுதியளித்த அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ, தன் மீதும் கட்சி மீதும் பொய்யான அவதூறுகளையும் வதந்திகளையும் தொடர்ந்து பரப்புபவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அரசியல் களத்தில் இந்த குறுஞ்செய்தி விவகாரம் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் இந்த விரிவான விளக்கமும் எச்சரிக்கையும் தற்போது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கந்தசஷ்டி விரதம் எப்படித் தோன்றியது தெரியுமா?

news

பெண் ஆட்சியருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினேனா?: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுப்பு

news

சமையல் With ஸ்வர்ணா: காரசாரமான கத்தரிக்காய் தக்காளி சட்னி!

news

சுயும்புவாக உருவாகி அருள் தரும்.. ஸ்ரீ வாராகி அம்மன்.. சென்னை to ராமேஸ்வரம் ஒரு ஆன்மீகப் பயணம் (5)

news

ரூ.500 நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்துங்க - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு யோசனை

news

தமிழக அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி ஆன்லைன் திருட்டு: சைபர் குற்றப்பிரிவு தீவிர விசாரணை!

news

Tueseday Morning Kitchen: வாழைப்பூ கூட்டு.. சாப்பிடலாம் வாங்க!!

news

The Dancing Peacock

news

உறவுகளுக்குள் தொலைந்துபோன அன்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்