சமையல் With ஸ்வர்ணா: காரசாரமான கத்தரிக்காய் தக்காளி சட்னி!

Nov 10, 2026,01:17 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


காலை டிபனுக்கு இட்லி தோசைக்கு சைடிஷ் ஆக காரசாரமான கத்தரிக்காய் தக்காளி சட்னி செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டா இருக்கும்.


தினமும் என்ன சமையல் செய்வது? என்ன சட்னி செய்வது? என்ன சாம்பார் செய்வது? என்று புலம்பி கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஒரு சிம்பிளான அருமையான சுவையான ரெசிப்பி இது. திடீரென விருந்தாளிகள் வீட்டிற்கு வரும் பொழுது இப்படி அசத்தலான சட்னி செய்து அசத்தலமே...


கத்தரிக்காய் தக்காளி சட்னி செய்ய முதலில் கிச்சனுக்குள் போகலாம் வாங்க பாஸ். 


தேவையான பொருட்கள்:




1. கத்தரிக்காய் -7 (பொடியாக கட் செய்து ஒரு கப் தண்ணீரில் போடவும்)

2. தக்காளி- 4 பொடியாக கட் செய்யவும்.

3. பெரிய வெங்காயம் 4 நீளவாக்கில் கட் செய்யவும்.

4. பூண்டு 25 பல்.

5. வர மிளகாய் 3,  காஷ்மீரி  மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன் சேர்க்க சிகப்பு கலர் நன்றாக வரும். (காரத்திற்கு ஏற்ப.)

6. புளி நெல்லிக்கொட்டை அளவு.

7. சீரகம் 1/2 ஸ்பூன்.

8. உப்பு தேவைக்கு ஏற்ப.

9. நல்லெண்ணெய் ஒரு குழி கரண்டி.

10. தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை ஒரு கொத்து.


இந்த பொருட்களை எல்லாம் ரெடியாக வைத்துக் கொண்டு கத்தரிக்காய் தக்காளி சட்னி  எப்படி செய்யலாம்..


செய்முறை:




1. கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி பூண்டு லேசாக தட்டி நன்றாக வதக்கவும்.

2. பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து, 1/4 ஸ்பூன் கல் உப்பு சேர்த்து  கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

3. கட் செய்த கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.  புளி சேர்க்கவும்

4. தக்காளி சேர்க்கவும், பின்னர் வர மிளகாய், (காஷ்மீர் மிளகாய் தூள் தேவைப்பட்டால்) சேர்க்கவும். 

5. சீரகம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. உப்பு சேர்க்கவும். இவை நன்றாக சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் அரைக்கவும்.

7. பின்னர் அதே வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி,கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

8. அரைத்த கத்திரிக்காய் தக்காளி சட்னியை தாளிப்புடன்  அந்த வாணலியில் சேர்த்து நன்றாக வதக்கவும்.

9. இப்பொழுது அழகாக கத்தரிக்காய் தக்காளி சட்னி சுருண்டு வரும்.

10. சட்னியை ஒரு சர்விங் பவுலில் மாற்றவும்.


சூடான மொறுமொறுவென்று தோசை,இட்லி, வடித்த சாதம் அல்லது குக்கர் சாதத்திற்கு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சை டிஷ் ஆக தொட்டுக்கொள்ள அருமையாக நாக்கு சப்பு கொட்டும் அளவிற்கு டேஸ்டியான கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெடியாகிவிட்டது. செய்து பாருங்க பாஸ்...


வேலைக்குச் செல்லும் பெண்கள் லஞ்ச் பாக்ஸ்க்கு  பேக் செய்யவும். பள்ளிக்குச் செல்லும்  குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸுக்கு கொடுத்து அனுப்பவும் அருமையான சட்னி.


சூடான இட்லிக்கு இந்த சட்னி கொடுத்தால் இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள். நல்லெண்ணெயில் நன்றாக வதக்கினால் இரண்டு நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து  பயன்படுத்தலாம். 


எங்க கிளம்பிட்டீங்க மார்க்கெட்டுக்கா.. கத்திரிக்காய் தக்காளி வாங்கவா பாஸ்...?!


மேலும் இதுபோன்ற  சுவாரஸ்யமான, டேஸ்டியான ரெசிபிகளுக்கு & சமையல் குறிப்புகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழ் "சமையல் வித் ஸ்வர்ணா". எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்