கை பிடித்து நடக்கும் போதெல்லாம்.. அப்பா!

Nov 11, 2026,10:51 AM IST

- ஜோசப் சாம்ராஜ்


நவம்பர் 11.


அப்பா மறைந்த நாள். 


அப்பா என் ஹீரோ. 


சிஎம்எஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளியில் விலங்கியல் ஆசிரியர். கரும்பலகையில் கலர் கலராக படம் வரைந்து பாடம் நடத்துவார். நிறைய மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்வார். செல்வம் ஹோட்டலில் பலருக்கு அன்னதானம் செய்வார். வைகோ ஐயாவிற்கு முதல் ஆசிரியர். சிறந்த விளையாட்டு வீரர். 


எல்லா திருமண விழாவிலும் அப்பா மைக் பிடித்து கதைசொல்லிப் பேசுவார். ஆலயத்திலும் பிரசங்கம் செய்வார். ரொம்ப கோபம் வரும். 


நான் வேலைக்குச் சென்று திரும்பி வரும்போது, நான் பேருந்துவிட்டு இறங்கும்போது எனக்காக பஸ் ஸ்டாப்பிலேயே காத்திருப்பார். 




என்னைப் பார்க்க கல்லூரி வரும்போதெல்லாம் எங்கள் கல்லூரியில் மணிக்கூண்டு கோபுரம் அருகில் காத்திருப்பார். அரியர் மதிப்பெண் அட்டையைக் காட்டுவதற்கு முன்பே பாசத்தில் அப்பாவைக் கட்டித்தழுவி விடுவேன்; 'அடியில் இருந்து தப்பிக்க அதான் வழி!' அவரும் கண்கலங்கி விடுவார்.

 

"அரியர், பெரிய விஷயம் இல்லை தம்பி!" என்று 'சதா கண்ணன்' கிட்ட எனைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார். அப்பாவும் அங்குதான் படித்தார். நிறைய சர்டிபிகேட் வாங்கியுள்ளார். ஹாக்கி வீரர் 'தன்ராஜ் பிள்ளை' போல. அப்பா பெயர்கூட தன்ராஜ். 


அப்பாவின் கடைசி காலம் கூட இருந்து கவனித்துக் கொண்டேன். அப்பா ஆசைப்பட்டது எல்லாம் நிறைவேற்றினேன். கை பிடித்து நன்றி கூறினார். அப்பா, கைபிடித்து நான் நடந்து சென்ற காலங்கள். பூங்காவில் அமர்ந்து கதை பேசிய காலம். விடிய விடிய பந்தயம் வைத்து கேரம் விளையாடிய காலம். லீவ் போட்டு கிரிக்கெட் மேட்ச் ரேடியோவில் கேட்பார். நாங்கள் 'யார் ஜெயிப்பார்?' என்று பந்தயம் கட்டிக்கொள்வோம். அப்பா மடியில் நான் தூங்கியதை மறக்க இயலவில்லை. 


ஒரு நாள் நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார். அப்பா நினைவு வரும்போது எல்லாம் அவர் எனை அழைத்து சென்ற இடங்களில் காலாற நடந்து செல்வேன். சில நேரங்களில் மகள் எனைத் தாங்கி பிடிக்கும்போது, என் கை பிடித்து நடக்கும் போதெல்லாம் அப்பா ஞாபகம் வரும்.


(கட்டுரையாளர் த.ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33 வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா  கற்றுக் கொடுத்த மேடைப்பேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கை பிடித்து நடக்கும் போதெல்லாம்.. அப்பா!

news

முப்பதைக் கடந்த மனதின் புரிதல்கள்!

news

சிவப்பு ரோஜாக்கள்!

news

தென்தமிழ் தலையங்கம்: "எனக்கு நானே ராஜா!" - சிங்கிள்ஸ் கொண்டாடும் நவம்பர் 11 தின சுவாரஸ்ய வரலாறு!

news

சென்னையில் நாளை தவெக எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் விஜய் அவசர ஆலோசனை

news

இரும்புக்கரம் கொண்டு அடக்குவாரா விஜய்? இனியும் சுதாரிக்காவிட்டால் தவெக அரசுக்கு சிக்கல்!

news

ரூ.400 கோடி லஞ்ச வழக்கு : திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி

news

தமிழக அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி ஆன்லைன் திருட்டு: சைபர் குற்றப்பிரிவு தீவிர விசாரணை!

news

பெண் ஆட்சியருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினேனா?: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்