சென்னை : தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, சென்னையில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, விசாரணைக்குப் பின்னர் இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தஞ்சையில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நடிகை த்ரிஷா குறித்தும், முதல்வர் விஜய் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக தவெக மகளிர் அணியினர் அளித்த புகாரின் பேரில் தஞ்சை போலீசார் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரை கைது செய்து விசாரைணக்கு அழைத்துச் சென்றனர்.

உதயநிதி வீட்டில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் சென்னை ஐகோர்ட்டில் திமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. உதயநிதி கைதுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் உதயநிதி கைது தொடர்பான விவரங்கள் அரசு தரப்பில் தாக்கல் செய்ய தாமதம் ஆனதால் இந்த வழக்கின் விசாரணை முதலில் பகல் 12 மணிக்கும், பிறகு 02.30 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
திமுக.,வினர் போராட்டம் :
உதயநிதி கைதினைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிராக தவெக.,வினரும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட திமுக.,வினர் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் மதிய உணவு அருந்துவதற்காகவும், இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காகவும் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலையத்தில் தற்காலிகமாக உதயநிதி தங்க வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஓய்வு மற்றும் உணவு இடைவேளைக்கு பிறகு, அவர் மீண்டும் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படுவார் என சொல்லப்பட்டது. அங்கு அவரை பார்க்க சென்ற முன்னாள் அமைச்சர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிறிது நேர ஓய்விற்கு பிறகு மீண்டும் உதயநிதி விசாரணைக்காக தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்.
விடுவிக்க கோர்ட் உத்தரவு :
இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் உதயநிதி கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்றைக்குள் விசாரணையை முடித்து உதயநிதியை விடுவிக்க வேண்டும் என நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்தார்.
அதற்கு, ரிமாண்ட் செய்யும் எண்ணம் கிடையாது. விசாரணைக்காக மட்டுமே அவர் தஞ்சை அழைத்து செல்லப்படுகிறார் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, விசாரணைக்கு பிறகு அவரை விடுவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதோடு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என உதயநிதி தரப்பிற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
இணையத்தில் செம டிரெண்டிங்.. பரபரக்கும் ‘You+Me - Against the World’ திரைப்பட கிளைமேக்ஸ்!
From Devotion to the stage.. Niranjanaa's Bharatanatyam Arangetram
Poem on Life: வாழ்க்கை!
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
{{comments.comment}}