அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'You+Me - Against the World என்ற ரொமாண்டிக் திரில்லர் திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று இணையத்தில் செம டிரெண்டிங்கில் உள்ளது.
எம்மா க்ரீனின் 'Toi+Moi' நாவலை அடிப்படையாகக் கொண்டு மனோன் கௌரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் விட்டோரியா டி சவோயா (ஆல்மா) மற்றும் லூகாஸ் பார்ஸ்கி (வாடிம்) முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தைப் பார்த்து ரசித்த ரசிகர்கள் பலர், இப்போது இந்தப் படத்தின் உணர்ச்சிகரமான கிளைமேக்ஸ் குறித்துப் பேசி வருகின்றனர்.
இந்தப் படத்தின் கதைதான் என்ன? வாங்க படிக்கலாம்

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஆல்மா (Alma) மற்றும் போதைப்பொருள் கும்பலின் பிடியில் சிக்கியிருக்கும் வாடிம் (Vadim) ஆகிய இருவரும் ஒரு மாணவர் திரைப்பட உருவாக்கத்தின் மூலம் இணைந்து காதலிக்கத் தொடங்குகின்றனர். போதைப் பொருள் கும்பலின் தலைவர் ஆஸ்கர், வாடிமைப் பழிவாங்க நினைக்கிறான். அவனைப் பொய் வழக்கில் சிக்க வைத்து காவல்துறையிடம் சிக்க வைக்கிறான். வாடிம் கைதாகிறான்.
அதன் பின்னர் வாடிம் பிணையில் வெளியில் வருகிறான். அதற்கு உதவுகிறார் ஆல்மாவின் தந்தை. ஆனால் மீண்டும் அவன் சிறைக்குச் செல்வதைத் தடுக்க ஆல்மாவின் தந்தை ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது.. ஆல்மாவின் தந்தையின் நிபந்தனை நிறைவேறியதா.. ஆல்மா - வாடிம் என்ன ஆனார்கள் என்பது மீதிக் கதை. அந்த மீதித் கதைதான் இப்போது பேசு பொருளாகியுள்ளது.
இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் புதிய விஷயம் இல்லைதான் என்றாலும் கூட அதன் படமாக்கம், காட்சியமைப்புகள் மிகவும் உணர்வுப்பூர்வமாக வந்திருப்பதால் ரசிகர்கள் இதைப் பற்றிப் பேசி சிலாகித்து வருகிறார்கள்.
இந்த உருக்கமான கிளைமாக்ஸ்தான் தற்போது ஓடிடி பிரியர்கள் மத்தியிலும் இணையத்திலும் அதிகமாகப் பேசப்பட்டு டிரெண்டிங்கிலும் இருந்து வருகிறது!
From Devotion to the stage.. Niranjanaa's Bharatanatyam Arangetram
Poem on Life: வாழ்க்கை!
இணையத்தில் செம டிரெண்டிங்.. பரபரக்கும் ‘You+Me - Against the World’ திரைப்பட கிளைமேக்ஸ்!
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
{{comments.comment}}