- மடிப்பாக்கம் பிரபாவதி
பவித்ரா பட்டணத்தில் படித்தவள். நாகரீகமாக வாழப் பழகியவள். அப்பா அம்மாவின் செல்லம். திருமணப் பேச்சு எடுத்தபின் வரும் வரன்கள் எல்லாமே ஏதோ ஒரு காரணத்திற்காக தட்டிப்போனது.
தரகர் கொடுத்த ஒரு ஜாதகம் நல்ல பொருத்தமிருந்தது. எப்படியோ பேசி முடித்து விட நினைத்தனர் பெற்றோர்.
மாப்பிள்ளை ரகுவரன் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், மாதத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு மட்டுமே சென்னையில் வேலை இருக்குமென்றும், மற்றபடி கிராமத்தில் வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பார் என்றும் தெரிந்தது.

அப்படியென்றால் என்ன நம்ப நாகரீக மங்கை பவித்ரா பூங்குடி கிராமத்திற்கு செல்ல போகிறாள்! சும்மா அதிரப்போகுது!
நடக்குமா? ம்ம்.. நடப்பதை பாருங்கள். திருமணமாகி முறைப்படி புகுந்த வீட்டிற்கு வந்தாயிற்று. முதல் இரண்டு நாட்கள் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.
அன்று காலை அறைக்கதவு தட்டப்பட்ட போது மணி ஐந்து. ரகு நன்கு தூங்கிக் கொண்டிருந்தான். பவித்ராதான் எழுந்து கதவை திறந்தாள். ரகுவின் பாட்டி நின்றிருந்தாள். "எந்நேரம் தூங்குறது? எழுந்திருச்சு குளிச்சிட்டு வேலையப் பாரு வா" என்றாள்.
"வாட், மிட் நைட்ல எழுந்திரிக்கனுமா? அதெல்லாம் முடியாது" என்றாள்.
"அதென்ன மிட்டாயோ எனக்கு தெரியாது. இப்ப எந்திரிச்சு வா" என்றாள் பாட்டி.
"ஓ மை காட், ஹே ரகு, கெட் அப் யா" என்றாள்.
"யாரும் இங்க ஊமையுமில்ல, செவிடுமில்ல" என்றாள் பாட்டி.
பொறுக்க முடியாமல் எழுந்து வெளியில் வந்தாள்.
"கெணத்தடில போயி குளிச்சிட்டு நல்லா அழகா சேலயக் கட்டிட்டு வா" என்றாள்.
துணியைக் கட்டிக்கொண்டு துணைதேவதை வேலாயி காவல் காக்க குளித்துவிட்டு சுடிதார் போட்டுக்கொண்டு வந்தாள்.
"இதென்ன ஆம்பள கணக்கா உடுப்பு போட்ருக்க"? என்றாள்.
இதுதான் எனக்கு கன்வீனியன்ட்" என்றாள். "கரண்ட் இல்லியா? என்ன சொல்ற தாயி? ஒன்னும் வெளங்கல" என்றாள் பாட்டி.
வாசலுக்கு வந்த பவித்ரா மூக்கைப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.
அப்போது காபி சகிதம் வந்த ரகுவின் அம்மா,"என்னம்மா ஆச்சு? ஏன் இப்பிடி ஓடியாற" என்றதும்,
"ஹே.. கவ் டங், கவ் டங், சே சே பேட் ஸ்மெல்" என்று ஓக்காலித்தாள்.
"என்னாடீ சொல்றா ஓன் மருமக, எத்தக்கண்டு பயந்துனுக்கீறா? என்னமோ கண்டம் கண்டம்னு சொல்றாளே, ஒன்னும் வெளங்களடீ என்றாள்.
இந்த அமர்க்களத்தில் எழுந்து வந்த ரகு பவித்ராவை பார்த்து, "என்னாச்சு டியர்? எதுக்கு கத்துன? என்றான்.
"அது என்னவோ பட்டப்பகல்ல வாசலுக்கு போய் பயந்துகினா போல, அந்த மெளகாயும் உப்பும் கொண்டாடி. ஒம்மருமவளுக்கு சுத்தி போடறேன்" என்றாள்.
"வாட்? யு மீன் சிள்ளீஸ்? சால்ட்? என்ன சுத்தி போடுவிங்களா? ரகு என்னது இதெல்லாம்?
ஐயோ இன்னைக்கு வெள்ளிக்கிழமை, மீனெல்லாம் கெடையாது. பருப்பு சாம்பார்தான்" என்றாள்.
ரகுவிற்கும் அவன் அம்மா வசந்தாவிற்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
ரகுவின் அம்மா ரகுவை பல்தேய்த்துவிட்டு வரச்சொல்ல, அவன் கிணற்றடிக்கு போனான். பின்னாடியே பவியும் போனாள்.
அவன் கிணற்றடியில் பல் தேய்த்துவிட்டு அப்படியே ஷார்ட்ஸை அவிழ்த்துவிட்டு ஜெட்டியுடன் கிணற்றிலிருந்து நீர் இறைத்து குளிக்க ஆரம்பித்தான்.
அப்படியே கண்ணை மூடிக்கொண்டு "ஹே ரகு வாட் எ ஷேம்? என்னடா இப்பிடி குளிக்கிற? என்றாள்.
வெட்கத்துடன் ஹாலுக்கு ஓடி வந்தாள். பாட்டி காலை நீட்டிக்கொண்டு காய் நறுக்க ஆரம்பித்திருந்தாள்.
பட்டணத்து மருமக வர்ரான்னு ரகுவின் தந்தை வெஸ்ட்டர்ன் டாய்லெட் மட்டும் கொல்லைப்பக்கம் கட்டியிருந்தார்.
அதைப் பார்த்தப் பாட்டி என்னடா இது குண்டாங்கணக்கா இருக்கு என்று கேட்டாள்.
பாட்டியும் புது மருமகளும் இப்படியாகப் பேசி தற்போது பாட்டி டச் மொபைலில் இன்ஸ்டாவில் கலக்குகிறாள் என்றால் பாருங்களேன்
(எழுத்தாளர் பிரபாவதி, சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பேக்கிடெர்ம் டேல்ஸ் (publishers) மூலம் ஏனையோருடன் சேர்ந்து 42 புத்தகங்களில் எழுதியிருக்கிறார். ராணி, விகடகவி, மலர்வனம், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், இறகுகள், தமிழ்நாடு இ பேப்பர், மின் கைத்தடி உள்ளிட்டவற்றில் இருபத்தி ஐந்துக்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார். தனது மகளுடன் இணைந்து ஒரே கதையை ஆளுக்கொரு அத்தியாயமாக எழுதி 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சின்னஞ்சிறு கதைகள் என்ற சிறுகதை தொகுப்பும், Booner to GenZ அலப்பறைகள் என்ற 35 பகுதிகள் அடங்கிய நாவலும் எழுதியுள்ளார்.)
கைரேகை!
Short Story: பட்டணத்து மருமகள்!
ஓட்டுநர்.. ஒரு நிமிடக் கதை (56)
நீடிக்கும் சர்ச்சைகள்- சிக்கும் எம்எல்ஏக்கள் - முதல்வர் விஜய் என்ன செய்ய வேண்டும்?
தென்தமிழ் தலையங்கம்: பெருநகரங்களுக்குப் பாடம் எடுத்த தேனி அல்லிநகரம்.. சபாஷ்!
கூவத்தூர் ஃபார்முலாவை கையில் எடுக்கிறதா தவெக? அவரச எம்எல்ஏ.,க்கள் கூட்டத்திற்கு இது தான் காரணமா?
நல்ல காலம் பிறக்குமா?... வேரில் இருந்து விழுது வரை (3)
ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மேல்முறையீடு!
கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய சுண்டைக்காய் குழம்பு!
{{comments.comment}}