- மடிப்பாக்கம் பிரபாவதி
ஆனந்த சிரிப்புடன் அம்மா சமைத்திட
அறுசுவையும் சேர்ந்து வயிறு நிறைக்கும்
சாம்பாரும் ரசமும் கூட்டுப் பொரியலும்
மல்லிகைப் பூவாய் உதிரும் சோறும்
.webp)
தட்டில் பரிமாற ஊரே மணக்கும்
அள்ளிப் போடாமல் கிள்ளிப் போட்டாலும்
அமிர்தம் தோற்றுப் போகும் உண்மை
வயிறு நிறைந்து மனமும் வாழ்த்தும்
போதுமென சொல்லாமல் சொல்லும்
எங்கிருந்து எல்லாவற்றையும் மிஞ்சும் ருசி
எப்படி என்றென் மனதில் வியப்புண்டு
உள்ளம் நிறைந்த அன்பும் ஆசையும்
கலந்து சமைத்திட்ட சமையல் அல்லவா!
இருக்காதா பின்னே! வேறென்ன சொல்ல?
(எழுத்தாளர் பிரபாவதி, சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பேக்கிடெர்ம் டேல்ஸ் (publishers) மூலம் ஏனையோருடன் சேர்ந்து 42 புத்தகங்களில் எழுதியிருக்கிறார். ராணி, விகடகவி, மலர்வனம், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், இறகுகள், தமிழ்நாடு இ - பேப்பர், மின் கைத்தடி உள்ளிட்டவற்றில் இருபத்தி ஐந்துக்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார். தனது மகளுடன் இணைந்து ஒரே கதையை ஆளுக்கொரு அத்தியாயமாக எழுதி 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சின்னஞ்சிறு கதைகள் என்ற சிறுகதை தொகுப்பும், Boomer to GenZ அலப்பறைகள் என்ற 35 பகுதிகள் அடங்கிய நாவலும் எழுதியுள்ளார்.)
அம்மா சமையல் மணம்!
அப்பா!
உயிர்ப்பு!
எம்பிரான் திருஞானசம்பந்தர் வரலாறு!
நல்ல காலம் பிறக்குமா?... வேரில் இருந்து விழுது வரை (3)
கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய சுண்டைக்காய் குழம்பு!
மதி.. ஒரு நிமிடக் கதை (55)
ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மேல்முறையீடு!
மகா கந்தசஷ்டி விரதம் 2ம் நாள் - சேலம் கந்தாஸ்ரமம் திருக்கோயில் மகிமை!
{{comments.comment}}