- மு.பாரதி
என் பெயரின் முதலெழுத்து மட்டுமின்றி
என் வாழ்வின் ஆரம்பப் புள்ளியும்
தாங்கள் தான்
கைப்பிடித்து கற்றுத் தந்த பாடங்களை விட
உம் அன்பால் கற்றுத் கொண்ட பாடங்களே அதிகம்
அப்பா
நேர்மை, கல்வி, நம்பிக்கை, உழைப்பு,
ஒழுக்கம், நேரம் தவறாமை அனைத்தையும் பயின்றேன்
உம்மிடம் அப்பா

இன்று நான் பெறும் ஒவ்வொரு வெற்றியும்
உங்கள் வளர்ப்பின்
சான்றல்லவா
அப்பா
தினம் தினம் எத்தனை புத்தாடைகள் அணிந்தாலும்
தாங்கள் வாங்கிக் கொடுத்த புத்தாடை அணிந்த
மகிழ்ச்சி
இன்று இல்லை
விடுமுறைக்கும்,
பண்டிகைக்கும் மகளின் வருகைக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்து தாங்கள் அழைத்துச் சென்ற
அன்பு
இன்று
ஒவ்வொரு பண்டிகைக்கும்,
விடுமுறைக்கும்
ஏங்கித் தவிக்கிறது
வாழ்க்கையில்
பல
சந்தோஷங்கள்
துக்கங்கள்,
சவால்கள்,
போராட்டங்கள்
இருந்தாலும்
என் நம்பிக்கையின்
ஊற்று
என்னுள் இருந்து என்றும் என்னை வழிகாட்டும் வழிகாட்டி தாங்களல்லவா
அப்பா
என் பெயரை அனைவரும் அழைத்தாலும்
தங்களுடைய
"என்னம்மா"
என்ற ஒரு குரலுக்கு
ஈடு இல்லை
நான் கேட்ட கடைசி வார்த்தையும் அலைபேசியில்
அதுவே
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64)
அப்பா!
உயிர்ப்பு!
எம்பிரான் திருஞானசம்பந்தர் வரலாறு!
நல்ல காலம் பிறக்குமா?... வேரில் இருந்து விழுது வரை (3)
கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய சுண்டைக்காய் குழம்பு!
மதி.. ஒரு நிமிடக் கதை (55)
ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மேல்முறையீடு!
மகா கந்தசஷ்டி விரதம் 2ம் நாள் - சேலம் கந்தாஸ்ரமம் திருக்கோயில் மகிமை!
நடிகை பிரியா பவானி சங்கர் திருமணம்...நீண்ட கால நண்பரை கரம்பிடிக்கிறார்
{{comments.comment}}