- கலைவாணி கோபால்
வம்பறா வரி வண்டு மணநாற மலரும் மதுமலர் நற்கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் ,பகவதி அம்மையாருக்கும் பிறந்தவர் திருஞானசம்பந்த பெருமான். திருஞானசம்பந்த பெருமான் பிறந்த காலத்தில் சமணம் மிகவும் மேலோங்கி இருந்தது. அதனால், சம்பந்தப் பிள்ளையாரின் பெற்றோர்கள் வருங்காலத்தில் சைவம் எப்படி இருக்குமோ? என்று கலங்கி இருந்தனர்.
அப்போது, அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை .... சைவத்தை ஒழிப்பதற்காக பிறந்த பிள்ளை நம் பிள்ளை என்று!
சிவபாத இருதயர் பிராமணர் என்பதால் ,அவர் தினமும் சீர்காழியில் உள்ள தோணியப்பர் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள குளத்தில் நீரில் மூழ்கி மந்திரங்கள் ஜெபித்து (அக மர்ஷ மந்திரம்) பின் தன்னுடைய அன்றாட வேலைகளை தொடர்வதை கடமையாக கொண்டிருந்தார்.
அப்படி ,ஒரு நாள்! சம்பந்த பிள்ளைக்கு மூன்று வயதாக இருக்கும் போது அவரையும் உடன் அழைத்துச் சென்று குளக்கரையில் அமர்த்திவிட்டு இவர், நீரில் மூழ்கி மந்திரங்களை ஜெபிக்க ஆரம்பித்தார்.
அப்போது, குழந்தையான சம்பந்தபிள்ளை தன் தந்தையை காணாது அழத் தொடங்கினார். , சிவபாத இருதயர் நீரில் மூழ்கி மந்திரங்களை ஜெபித்துக் கொண்டிருந்ததால் அவருக்கு சம்பந்தப்பிள்ளை அழுதது காதில் விழவில்லை. ஆனால் ,ஆலயத்தில் உள்ள தோணி அப்பருக்கும் உமையவளுக்கும் பிள்ளையின் அழுகுரல் கேட்டது.

உடனே , பெருமான் உமையம்மையை குழந்தைக்கு பால் கொடுக்கும்படி அனுப்பி வைத்தார். அம்மையாரும் பெருமானின் வார்த்தைக்கு இணங்கி ,..வந்து சம்பந்தப் பிள்ளைக்கு பொற்கிண்ணத்தில் ஞானப்பாலை அருந்தச் செய்து பின் குழந்தையின் அழுகுரல் நின்றவுடன் சென்றார்.
தண்ணீரில் இருந்து எழுந்து வந்த சிவபாத இருதயர்.. குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதை கண்டு அதிர்ந்தார். அந்தக் குழந்தையிடம் ஆத்திரமும், பதற்றமும், கொண்டு பால் கொடுத்தது யார்? என கேட்டார் அந்த குழந்தையோ! கோபுரத்தை கை காட்டியது. யார்? கொடுத்தாலும் குடிப்பாயோ? எனச் சொல்லி அந்த கிண்ணத்தை பிடித்து இழுத்து கோபுரத்தின் மேல் எறிந்தார்.
(அந்தச் கிண்ணம் பட்டு கோபுரம் மெல்லிய வெட்டுப்பட்ட இடம் இப்போதும் உண்டு)
குழந்தையும் சிவனையும் பார்வதியினும் கைகாட்டி கொண்டே இருக்க குழந்தைக்கு என்னமோ ஆகிவிட்டது . என சிவபாதஇருதயர் அஞ்சி குழந்தையை கோயிலுக்குள் அழைத்து நெற்றியில் திருநீறு அணிவித்தார். ஆனால், குழந்தை எழுந்து நின்று மெல்ல அசைந்து, அசைந்து ,சென்று சிவனின் சன்னதி முன்பு நின்று ....
"தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்" என்னும் பதிகத்தை பாடினார். அங்கிருந்து எல்லோரும் அசைவின்றி நின்று என்ன நடக்கிறது? என்று புரியாமல் குழந்தையை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
சிவபாத இருதயர் அந்த இடத்திலேயே சிலை போல் அமர்ந்தார். கொஞ்ச நேரம் அவரிடம் வார்த்தைகள் இல்லை . அப்போதுதான் அவருக்கு புரிந்தது. உமையவளே!.... வந்து ஞானப்பலை கொடுத்துள்ளார் என்று ,ஆனந்த கண்ணீர் சிந்தினார். கூட்டம் மொத்தமாக திருஞான சம்பந்தப் பிள்ளையை வாழ்த்தியது. குழந்தையை தோல் மேல் சுமந்து வீட்டிற்கு சென்று நடந்ததை எல்லாம் பகவதி அம்மையாருக்கு விளக்கினார் அம்மையாருக்கும் 'சான்றோன் என' 'ஞான சம்பந்தன்' என வெளியில் மக்கள் கூறியதை கேட்டு அவருக்கும் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தது.
இந்த நிகழ்வு நடந்தது வைகாசி திருவாதிரை நாளில்..
சமணம் தலைதூக்கப்பட்டு , சைவம் அழிந்த நிலையில் , ஞானசம்பந்த பிள்ளை பாழ்பட்ட ஆலயங்களுக்கு சென்று பாடல்களை பாடினார் . .அது சம்பந்தர் யுகம் எனும் பெரும் சூறாவளியாக சுழல தொடங்கிற்று .......பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சீர்காழிக்கு அருகில் உள்ள திருவாலக்கா என்னும் ஆலயத்திற்கு தந்தையார் சுமக்க அக்கோயிலை வந்தடைந்த சம்பந்தர் "மடையில் வாளை பாயமாதரார்" என்னும் பதிகத்தை தன் பிஞ்சு கரங்களால் தாளம் தட்டி பாடினார். அந்த ஞானக்கோழியின் பிஞ்சு கரங்கள் சிவந்து போனதை அறிந்த சிவன் ஞானசம்பந்தப் பிள்ளையின் கைகலில் பொன் தாளங்கள் இரண்டை கிடைக்க செய்தார்.
அந்த தாளங்களை பெற்றுக் கொண்டு 'நமச்சிவாய' என சொல்லி மேலும், தாளமிட்டு உற்சாகமாக பாடினார் சம்மந்தர். இன்றளவும், அவ்வாலையத்தில் உள்ள சிவபெருமான் 'பொற்றாளநாதர்' என்று அழைக்கப்படுகிறார்.
உயிர்ப்பு!
எம்பிரான் திருஞானசம்பந்தர் வரலாறு!
நல்ல காலம் பிறக்குமா?... வேரில் இருந்து விழுது வரை (3)
கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய சுண்டைக்காய் குழம்பு!
மதி.. ஒரு நிமிடக் கதை (55)
ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மேல்முறையீடு!
மகா கந்தசஷ்டி விரதம் 2ம் நாள் - சேலம் கந்தாஸ்ரமம் திருக்கோயில் மகிமை!
நடிகை பிரியா பவானி சங்கர் திருமணம்...நீண்ட கால நண்பரை கரம்பிடிக்கிறார்
நவம்பர் 11 .. தேசிய கல்வி தினமாக கொண்டாடுவது ஏன்?
{{comments.comment}}