- கலைவாணி கோபால்
சோழநாட்டில் உள்ள திருவாரூர் அருகே ஏமப்பேருர் என்ற ஊரில் 'திரு நெய் பேர் 'என்னும் குறுகிய ஊர் மிகவும் வளமிக்க ஊரகவும் இருந்தது. அந்த ஊரில் ஒரு அந்தணர் குடும்பத்தில் பிறந்த மிகப் பெரிய சிவ பக்தர் நமி நந்தி அடிகள்.
இவர், அந்தணர் என்பதாலும், சிவபக்தர் என்பதாலும், திருவாரூரில் உள்ள வான்மீகி நாதரை ... வணங்கி விட்டு தீபம் ஏற்றுவது அவரது அன்றாட கடமையாக இருந்தது. அவரை வணங்கி விட்டு வந்த பின்பு தான் அன்றாட வேலைகளை சிவனை முன் நிறுத்தியே செய்து வந்தார்.
அப்படி நெய்யினை எடுத்துக் கொண்டு சென்று திருவாரூர் ஆலயத்தில் விளக்கிட்டு வருவதை தன் தலையாய கடமையாக கொண்டிருந்தார். ஒருநாள் வான்மீகிநாதரை வணங்கி அங்கிருக்கும் சன்னதியில் எல்லாம் விளக்கு ஏற்றினார்.
மனம் நிறைந்து வெளியில் வரும்போது தான் அந்த காட்சியினை கண்டார். ஒரு சன்னதியில் மட்டும் விளக்கு எரியாமல் இருந்தது ....காரணம் அங்கு, எண்ணெய் தீர்ந்து இருந்தது. ஓடி சென்று நெய் கலயத்தை கவிழ்த்தார். ஆனால் , அதிலும் நெய் இல்லை இரண்டாம் பிரகாரத்தில் ஆலயத்தின் உள்ளே இருக்கும் அந்த சன்னதி ஆலயத்தை ஒட்டினார் போல் வெளியே இருந்தது. அது அறநெறி நாதர் சன்னதி.
ஊரில் சென்று நெய் எடுத்து வர நேரமும் இல்லை. அங்கு சென்று எடுத்து வந்தால் இரவு ஆகிவிடும். அன்றைய நாட்களில் கடைகள் இல்லை. அதே நேரம் அறநெறி நாதர் சன்னதி விளக்கின்றி அப்படியே விட்டு செல்லவும் இவருக்கு மனம் வரவில்லை.

அப்போது, பெரும்பாலும் அங்கு சமணர் குடியிருப்புகளே இருந்தன. அவர்கள் திருநீறிட்டவரை பார்த்தால் கூட தீட்டு என்று இருந்தவர்கள். அவர்களிடம் கேட்கலாமா? வேண்டாமா? என்று மனம் கேட்காமல் சிவனின் அறை இருண்டு கிடக்கிறதே.... என்று ஒவ்வொரு கதவாக தட்டினார்.
அங்குள்ள ஒரு சமணரின் வீட்டிற்கு சென்று மனம் கேட்காமல் கதவை தட்டி விளக்கேற்ற எண்ணெய் தருமாறு கேட்டார். அவர்களோ.... 'தில்லையிலேயே கையிலே கனல் ஏந்தி தானே ஆடுகின்றார் அவருக்கு ஏனையா விளக்கு 'என ஏளனமாக பேசினர்.
இருந்தும், மனம் கேட்காமல் அடுத்த வீட்டு கதவையும் தட்டினார்.. அவர்களும் பதிலுக்கு, 'சிவனுக்கு சக்தி இருந்தால் அவருக்கு ஏனய்யா விளக்கு? நெய் எல்லாம் இல்லை நீரை ஊற்றி வேண்டுமானால் விளக்கு ஏற்று' என அவர்களும் ஏளனத்தோடு ஜன்னல் கதவுகளையும், வாசல் கதவுகளையும், "'சைவ பாவியே போ" என கூறி கதவடைத்தனர்.
அடியாருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சிவனிடம் வருந்தினார். அவர்கள் என்னை அவமானப்படுத்தினால் கூட பரவாயில்லை. உன்னையும் அல்லவா; அவமானப் படுத்துகிறார்கள். என்று சொல்லி வாய் விட்டு கதறினார். அவரின் கண்ணீர் தரையை தொட்ட போது, தனக்காக ஒருவன் சமணர்களிடம் இப்படி அவமானப்படுகிறானே என கருதிய இறைவன் ஓர் அசரீரி மூலம் "அந்தக் குளத்தில் இருந்து நீர் எடுத்து வந்து விளக்கினை எரிப்பீராக" என ஆணையிட்டார்.
ஆலயத்தில் அக்குரல் ஒலித்ததும் உற்சாகமாக அடிகளார் கண்களை துடைத்தபடி சங்கு தீர்த்தத்தில் 'நமசிவாய' என சொல்லியபடியே நீர் எடுத்து வந்து திரியிட்டு கோவிலில் விளக்கேற்றினார். என்ன அதிசயம்! ....நீரில் இட்ட திரியில் விளக்கு ஜெக ஜோதியாக எரிந்தது.
சமணர்கள் முகத்தில் சாணி பூசியது போல் ஆயிற்று. சிவனின் அதிசயத்தை கண்டு திகைத்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் அவமானத்தில் தலை குனிந்தனர். அவர்கள் குறுகிய நாட்களில் அவ்விடத்தை காலி செய்து வேறு இடத்திற்கு சென்றனர்.
மற்றவர்கள் ஏற்றினால் எறியாத நீர் அடியார் ஏற்றினால் மட்டுமே அழகாக நெய் விளக்கு போல் எரிந்தது .இந்த அதிசயம் அங்கு உள்ள சோழ மன்னனுக்கும் எட்டியது. ஓடி வந்து அந்த அதிசயத்தை கண்டு அவரை அணைத்துக் கொண்டான். பொன்னும் ரத்தினங்களும் அவர் காலடியில் கொட்டி கோவிலில் தலைமை அர்ச்சகராய் இருப்பதற்கு இடம் அளித்தான் மன்னன். பொறுப்பில் அமர்ந்ததும் பல சீர்திருத்தங்களை செய்தார் நமி நந்தியார்.
பல்லக்கு சேவகர்கள் அவருக்கு கீழ் ஏகப்பட்ட அர்ச்சகர்கள் என பெரும் செல்வாக்குடன் வலம் வந்தார் அடியார். ஒரு கட்டத்தில் கோவிலில் அவர் சொல்லாமல் எதுவும் நடப்பதில்லை எனும் நிலை வந்தது. அந்தஸ்தும், மரியாதையும், கூடும்போது மனித மனம் தன்னை அறியாமல் ஒரு மாயக்கட்டில் சிக்கும்.... தான், என்ற அகங்காரம் மேலெழும் அதுதான் அடியார்க்கும் நடந்தது .ஒரு பக்தனுக்கு அறவே இருக்கக் கூடாத கர்வமும், மாயையும் அவரை அறியாமலே அவருக்கு வந்தது.
அதாவது, தான் மிக மிக ஆச்சாரமான சம்பிரதாயங்களில் ஊறியவன் அதனால் தான் சிவன் தனக்கு மட்டும் அபிமான மிக்கவராக இருக்கிறான் . தனக்காக மட்டுமே அற்புதங்கள் நிகழ்ந்தன என எண்ணிக்கொண்டார்.
தன் பக்தன் ஒருவனுக்கு தான் கொடுத்த அருளே! அவன் மாயையில் சிக்க காரணமாக சிவன் விடுவாரா? அவர் கர்வம் உடைக்க சித்தம் கொண்டார். திருவாரூர் பக்கம் மணலி என்றொரு ஊர் உண்டு. அங்கு சுவாமி தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தார் .அதில் அடியாரும் கலந்து கொண்டார். கலந்துகொண்டு வீட்டிற்கு வந்தவர் மனைவியிடம்.....
நான் திருவாரூர் சென்றதால் அங்குள்ள அனைவருடனும் வலம் வந்ததால் தீட்டு பட்டிருக்கும். எனவே ,எனக்கு வெந்நீர் வை. பின் வாசல் வழியாக வருகிறேன் எனக் கூறி தெரு திண்ணையிலே சற்று கண் அயர்ந்தார்.
அப்போது அவர் கனவில் பெருமான் தேவியுடன் எழந்தருளி திருவாரூரில் வந்தவர்கள் எல்லாம்' எம் கணங்களே' அவர்களை தொட்டதினால் உனக்கு தீட்டா? என கேள்வி எழுப்பினார். கேள்வி எழுப்பிய உடனே, அடியாரின் தூக்கம் கலைந்தது. உடல் முழுக்க வியர்வை கொட்டியது. பதற்றம் அவர் மனதில் நிலவியது. நான் என்ற அகங்காரம் அவர் சிந்தையில் இருந்து அப்போது அழிய ஆரம்பித்தது.
உடனே , சிவனே.... சிவனே...என சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் ஓடினார். மனைவி ஆச்சரியமாக பார்த்தார். வெந்நீர் வைக்க சொன்னவர் ஏன் இப்படி ஓடி வருகிறார் என எண்ணம் கொண்டார்..... அப்போது, அடியார் திருவாரூரில் உள்ளவர்கள் எல்லாரும் என் சிவத்தின் கணங்களே!.... அப்போது, எனக்கு எப்படி தீட்டாகும்? நான் எவ்வளவு பெரிய தவறு செய்தேன். என்பதை உணர ஆரம்பித்தார் தான் என்ற ஆணவம் தன்னை ஆட்டி வைத்தது கண்டு குற்ற உணர்ச்சிக்கு ஆளானார்.
அன்றிலிருந்து அவர் ஒரு முழுமையான சிவனடியாராக கோயிலுக்கு வரும் பக்தர்களிடமும், அனைவரிடமும் பணிவாகவும், மிகவும் சிறத்தையுடனும் நடந்து கொள்ள ஆரம்பித்தார். ஒவ்வொரு மனிதரையும் சிவனின் வடிவாகவே பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு மனம் தெளிவானது.
சிவனுக்குரிய அனைத்து மரியாதைகளையும், கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கும் கொடுத்து மிகச் சிறப்பாக திருப்பணிகளை செய்து ....சிவன் அருளாலும், ஞானத்தாலும், திரு தொண்டை இரு கண்கள் போல கருதி செய்து வந்தார் .இதனால், இவருக்கு "தொண்டர்களுக்கு ஆணி "அதாவது 'அச்சாணி' என திருநாவுக்கரசர் இவரை சிறப்பித்து கூறியுள்ளார்.
நாவுக்கரசரின் வார்த்தைகள் அவருக்கு மிக பொருத்தமாக அமைந்தன. தன் பத்தனை நல்வழிப்படுத்தி அவர் திருப்பணிகளால் மகிழ்ந்த சிவன் காலம் வரும்போது அவரை தன்னோடு கைலாயம் சேர்த்துக் கொண்டார்.
திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி. என்னும் வாக்கியத்திற்கு ஏற்ப... திருவாரூரிலலே பிறந்து முக்தி அடைந்து சிவனுடன் கைலாயம் அடைந்தார் நமி நந்தி அடிகள்.
இவரின், குருபூஜை வான்மீதி நாதர் ஆலயத்தில் வைகாசி ,பூசம் நட்சத்திரத்தில், கொண்டாடப்படுகிறது. திருவாரூர் ஆலயத்தில் அறநெறி நாதர் சன்னதி அருகே இன்றும் சங்கு தீர்த்தம் உண்டு. அதிலிருந்து நீர் எடுத்து வந்து விளக்கேற்றிய அடிகளாருக்கு தனித் சன்னதியும் உண்டு. அன்பு மட்டுமே ஆண்டவனிடம் கொண்டு சேர்க்கும் ஒரே பாலம் என ஒவ்வொரு நாயன்மார்களும் வாழ்ந்து காட்டியுள்ளனர்.
நமிநந்தி அடிகள் திருவடிகள் போற்றி போற்றி
"சிவாய நாம" 'திருச்சிற்றம்பலம்'
முதல்வர் விஜய்யின் மெகா டூர் பிளான்: 5 தொகுதி இடைத்தேர்தலில் தெறிக்க விட தவெக ரெடி!
Unparalleled versatile actor Chandrababu: நான் ஒரு முட்டாளுங்க!
"மனம் இரங்கி வா!-கோபம் மலை இறங்கி வா!"
நளபாகம் - ஒரு நிமிடக் கதை (49)
இலவசம் ஏற்காதே!
யாருக்கும் தெரியாத அம்மாவின் வலி - கடைசி பெஞ்சில் இருந்த பெண்(4)
விலங்குகள் பேசினால்!
"புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்று" - இதோட உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
சென்னை, தேனியை தொடர்ந்து கோவையில் இருந்தும் கைதி தப்பியோட்டம் - 4 போலீஸார் சஸ்பெண்ட்
{{comments.comment}}