Unparalleled versatile actor Chandrababu: நான் ஒரு முட்டாளுங்க!

Oct 31, 2026,01:19 PM IST

- பாரதிராஜன்

    

05/08/1927ல் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் நடிகர் சந்திரபாபு. இவருடைய தந்தை சுதந்திரப் போராட்ட வீரர். தந்தை உப்பு சத்யாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்ட காரணத்தால்  கைது செய்யப்பட்டு ,விடுதலையான பிறகு தந்தை மற்றும் சந்திரபாபு இலங்கை செல்ல நேர்ந்தது.


மறுபடியும் சென்னை வாசம். பாபுவின் தந்தை திணமணி பத்தரிகையில் வேலை செய்தார். பாபுவின் நண்பர் கணபதி என்பவர் தான் பாபுவின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு அவரை நடிக்க ஊக்குவித்தார். பள்ளிக்கூட காலத்தில் இருந்தே பாடுவதும் நடனமாடுவதும் சந்திரபாபுவுக்கு பிடித்த விஷயங்கள். 


முதன் முதலில், தனஅமராவதி என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார் சந்திரபாபு. 1952ல் வாசன் ஸ்டூடியோ முன்பாக தற்கொலை செய்ய அவர் முயற்சிக்க, அவர் கைது செய்யப்பட, ஜட்ஜ் முன்பாக  ஷேக்ஸ்பியர் நாடக வசனம் பேசி நடித்ததால், ஜட்ஜ் அவரை எச்சரித்து விடுதலை செய்தார்.


இவ்விஷயம் கேள்விப்பட்ட வாசன் அவர்களுடைய படமான மூன்று பிள்ளைகள் படத்தில் நடிக்க வைத்தார்.  ஏவிஎம் மின் சகோதரி படத்தில் நடித்து தூள்கிளப்பினார். அந்த படத்தில் தான் நான் ஒரு முட்டாளுங்க பாடல் இடம் பெற்றது.




அடுத்ததாக சபாஷ்மீனாவில் நடிகர்திலகம் சிவாஜி கணேசனுடன் இரட்டை வேடங்களில் நடித்தார். எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் நடித்தார். ராஜா படத்தில் 3வேடங்களில் நடித்து பட்டையை கிளப்பினார். அன்னை படத்தில் புத்தியுள்ள மனிதரெல்லாம் பாடல் பாடினார். பாரதவிலாஸ் படத்தில் டாக்டராக நடித்தார். 


திரையுலகில் வென்ற சந்திரபாபுவுக்கு, மணவாழ்வு சோபிக்கவில்லை. மாடிவீட்டு ஏழை படம் எடுக்க ஆரம்பித்து பிரச்னைகள் காரணமாக கடன் பட்டார். கடைசி காலத்தில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் ஆதரவில் இறக்கும் வரை வாழ்ந்தார். 8/3/1974 காலமானார் சந்திரபாபு. அவர் இறந்த பிறகு சிவாஜிகணேசன் தான் அவரது ஈமச்சடங்குகளுக்கு பண உதவி செய்தார்.


தமிழ்த் திரையுலகில் சிகரம் தொட்டு கடைசியில் பரிதாப நிலைக்குப் போய் மறைந்து போன முக்கியக் கலைஞர்களில் சந்திரபாபுவும் ஒருவர்.


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன், பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்