- சிவசத்தியா, காரைக்குடி
கூ -தூ - சே!
பூமி தூய்மையே உயர்வு!
பூமியதனில் மாந்தனின் பங்கு
தூய்மையில் தானே உடல் நலம் காக்கும்
உயிர் பலி தடுத்து
இறைச்சி உண்பதை நிறுத்து
நாவை ஒடுக்கு
நோயை தடுத்து
தூய்மையைப் பேணிடு
அன்பும் கருணையாய்
உயிர்களை மதித்திடு

ஐம்பொறி உணர்வாளனை
இகழ்ச்சியாக
நோக்கும்
எண்ணமது நீக்கிடு
கடவுளால் கண்டிடத் தோன்றிடு
அன்பதைக்கூட்டிட
இன்பமது பெருகிடும்
அருள்நிலை அமைத்திடும்
முன்வினை நிலை நீங்கிடும்
இறைவனவன் திருவருள் கூடும்
கார்முகில் மும்மாரி பொழிந்திடும்
பூமியில் தழைத்திடும் உயிர்கள்
பிழைத்திடும்
மண(ன)ம் பறப்பி பகிர்ந்து குலவிடும்
துன்பம் நீங்கி மக்கள் மனம்
மகிழ வாழ்வர்
வறுமையால் மானுடவினம் இறப்பு நேராமல்
வான் ஆற்றல் உள்ளவரை ஒழுக்கம் பழக்கம் விளக்கமாய்
உயர்வான வாழ்வை மாந்தன் உன்னத ஒழுக்கமாய் வாழ்ந்திட
எண்ணம் சொல் செயலாய் அமைத்து
அன்பு அறநெறி பண்பு கொண்ட
தனிமனித அமைதியே
நிலைத்திடும் அமைதியே தூய்மையாம்.
கூ - தூ -சே = தூ!
வட்டாரத்தில் கலைத் திருவிழா!
சோர்வால் வளர்ச்சி கெடும் சுயமில்லா வேலை கெடும் - ஔவையின் பொன்மொழி 60 (8)
வெயிலோ மழையோ.. எதுவா இருந்தா என்ன.. சுரைக்காய் பஜ்ஜிதான் துணைக்கு இருக்கே!
ஓரெழுத்து ஒருமொழி - கூ -தூ - சே (பா இரண்டு)
முதல்வர் விஜய்யின் மெகா டூர் பிளான்: 5 தொகுதி இடைத்தேர்தலில் தெறிக்க விட தவெக ரெடி!
Unparalleled versatile actor Chandrababu: நான் ஒரு முட்டாளுங்க!
"மனம் இரங்கி வா!-கோபம் மலை இறங்கி வா!"
நளபாகம் - ஒரு நிமிடக் கதை (49)
இலவசம் ஏற்காதே!
{{comments.comment}}