- கவிக்கடல் அ.ல.ஏகலைவன்
நேரிசை வெண்பாவில் அவ்வையின் 60 ஆத்தி சூடி மொழிகளை தொகுத்துக் கொடுத்து வருகிறார் தமிழ்ப் பெருந்தகை கவிக்கடல் அ.ல. ஏகலைவன். அந்த வரிசையில் இன்று 8வது பகுதியில் மேலும் இரு மொழிகளைக் காணவுள்ளோம். வாருங்கள்.
விதைகளும் மண்ணைமுட்டி வெல்லும் வினையே
சிதையா மனத்தினில் சீர்த்தே - பதைத்தெழும்
ஓர்ப்பில்லா உள்ளத்துள் ஊனமும் தோன்றிடும்
சோர்வால் வளர்ச்சி கெடும்
விளக்கவுரை

விதைகள் மண்ணை முட்டி வெளியே வருதல்போல் மனதில் சுறுசுறுப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் ;அவ்வாறு இல்லையெனில் உள்ளத்தில் ஊனமும் தோன்றிடும் சோர்வால் வளர்ச்சியும் கெட்டுவிடும்.
--
உயர்வர யாவையும் ஊருக்குத் தானம்
தயவெனவே தந்திடல் தக்கார்- நயமாம்
அயர்விலாது தேடி அனைத்தையும் தந்தார்
சுயமில்லா வேலை கெடும்
விளக்கவுரை
உயர்வதால் வரும் பொருளை தானம் தருவது இயல்பு ;ஆனால் தனக்கு இல்லாமல் தருவது ;
தான் செய்த வேலையை கெடுக்கும்.
(மதிப்புறுமுனைவர் கவிக்கடல் அ.ல.ஏகலைவன், கிராம நூலகர், பிடாகம் ஊராட்சி, எலவனாசூர்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்)
சர்தார் வல்லபாய் படேல்.. ஒற்றுமையே நம் பலமாகுமே!
வட்டாரத்தில் கலைத் திருவிழா!
சோர்வால் வளர்ச்சி கெடும் சுயமில்லா வேலை கெடும் - ஔவையின் பொன்மொழி 60 (8)
வெயிலோ மழையோ.. எதுவா இருந்தா என்ன.. சுரைக்காய் பஜ்ஜிதான் துணைக்கு இருக்கே!
ஓரெழுத்து ஒருமொழி - கூ -தூ - சே (பா இரண்டு)
முதல்வர் விஜய்யின் மெகா டூர் பிளான்: 5 தொகுதி இடைத்தேர்தலில் தெறிக்க விட தவெக ரெடி!
Unparalleled versatile actor Chandrababu: நான் ஒரு முட்டாளுங்க!
"மனம் இரங்கி வா!-கோபம் மலை இறங்கி வா!"
நளபாகம் - ஒரு நிமிடக் கதை (49)
{{comments.comment}}