சினத்தால் அறமும் கெடும் சிந்திக்கா செய்கை கெடும்.. ஔவையின் பொன்மொழி 60 (7)

Oct 24, 2026,02:34 PM IST

- கவிக்கடல் அ.ல.ஏகலைவன்


தமிழ்ப் பெருந்தகை கவிக்கடல் அ.ல. ஏகலைவன், நேரிசை வெண்பாவில் அவ்வையின் 60 ஆத்தி சூடி மொழிகளை தொகுத்துக் கொடுத்து வருகிறார். இன்று ஏழாவது தொகுப்பில் இரு மொழிகளைக் காண இருக்கிறோம்.


இனம்காக்க அன்புரைத்தல் ஏற்றறிவின் ஆக்கம்

தனமிதுவே காட்டிடும்  தாழும்- மனத்தார் 

பினற்றிடுவார் வானரம்போல் பாழாக்கி வாழ்வில்

சினத்தால் அறமும் கெடும்


விளக்கவுரை




இனம் காக்க அன்போடு பழகுதல் நலம் ;இதுவே நல்ல தனமாம்; தாழ்மையுள்ள மனத்தார் வானரம் போல்  பேச்சும் செய்கையும் சினத்தால் நிர்மூலமாய் கெடும்.


--


விரைவும் கெடுதியாம் வேகமும் கேடாம்

கரைக்கட்டா நீர்வீணே காண்பீர்- நிரைசீழ்

நிந்தனையாய் செய்கைகள் நிர்மூல மாய்அழியும்

சிந்திக்கா செய்கை கெடும்


விளக்கவுரை


விரைவும் வேகமும் ஆபத்து ;கரை கட்டா நீர் போல் நிந்தனையான செய்கைகள் நிர்மூலமாய் அழியும் கெடும்.


(மதிப்புறுமுனைவர் கவிக்கடல் அ.ல.ஏகலைவன், கிராம நூலகர், பிடாகம் ஊராட்சி, எலவனாசூர்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்