- ஈரோடு மாலதி
கொங்குநாடு என்றாலே நினைவுக்கு வருவது விவசாயமும், அதற்கான நீரும், உரமும்தான். அந்த வகையில் மிகச் செழிப்பான பாக்கியம் பெற்றது எங்கள் ஊர்!
எங்கள் ஊரில் உள்ள பால் சொசைட்டிகளில், எந்தவித கலப்படமும் இன்றித் தூய்மையான முறையில் பால் வழங்கப்படுகிறது. மாடுகளுக்குப் பருத்தி விதை புண்ணாக்கு, சீமைப் புல் மற்றும் பலவகையான இயற்கை உணவுகள் வழங்கப்படுகின்றன. இங்கிருந்து பாக்கெட் செய்யப்படும் பாலை, பிரிட்ஜில் வைத்து இரண்டு நாட்கள் ஆனாலும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்; சர்க்கரை நோயாளிகளும் தாராளமாகப் பருகலாம். 'நாட்டு மாட்டுப்பால்' என்றாலே எங்கள் கொங்கு மாநிலம்தான் நினைவுக்கு வரும். இங்கு பால் என்பது வெறும் உணவு மட்டுமல்ல, ஒரு புனிதமானது!
வாழை இலையில் உள்ள நார்ச்சத்து போல, அருகம்புல்லின் அருமையும் அளவிட முடியாதது. அன்றைய காலத்தில் சிவனடியார்களும் சித்தர்களும் அருகம்புல் சாற்றைக் குடித்து வந்ததால், 300 ஆண்டுகள் வரை வாழ்ந்ததாக ஐதீகம் உண்டு. பல்வேறு மூலிகைகள் நிறைந்த எங்கள் ஊரில், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அருகம்புல் பெரிதும் உதவுகிறது. இந்த உடல் எடையைக் குறைக்கும் ரகசியம் பலருக்கும் தெரிவதில்லை.

நாங்கள் பசுமாடுகளுக்கும் காளை மாடுகளுக்கும் சிறந்த முறையில் தீவனங்களைக் கொடுத்துப் பராமரிப்பதால், மாடுகள் அனைத்தும் கம்பீரமாக இருக்கும். ஜல்லிக்கட்டிற்காகப் பெயர்பெற்ற எங்கள் ஊரின் காங்கேயம் காளைகளும், செவலைக்கண்ணு காளைகளும் மிகவும் புகழ்பெற்றவை.
இவைகளின் கொம்புகள் நீண்டு, சில செவ்வாழை மாடுகளின் கொம்புகள் மிகவும் தடிமனாக 'U' வடிவத்தில் பார்க்கவே பயம் கலந்த கம்பீரத்துடன் இருக்கும். எதற்கும் அஞ்சாத காளைகள் எங்கள் ஊர்க்காளைகள்!
குறிப்பாக, அந்தியூர் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுவரும் மாடுகளைப் பார்த்தால் அதன் கால்கள், கொம்புகள் மற்றும் உடல் அமைப்பு மிகப்பெரிய அற்புதத்தைப் பார்ப்பதுபோல் இருக்கும். மற்ற மாடுகளைப் போல அல்லாமல், கொங்கு மாடுகள் எப்போதும் தனித்துவமானவை.
இன்று தொழில்நுட்பங்கள் எவ்வளவோ மாறிவிட்டன; எத்தனை வேகமான கார்கள் வந்தாலும், எங்களது கொங்கு நாட்டுக் காளை மாடுகள் எதற்கும் அஞ்சாமல், பலநூறு கிலோ எடையுள்ள பாரங்களை இழுத்து விவசாயத் தொழிலுக்குப் பல பத்தாண்டுகளாக உதவி வருவது மிகுந்த பெருமைக்குரியது.
ஈரோடு மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில், இந்த மாடுகளைக் கொண்டு பாரம் இழுக்கும் வண்டிகள் ஒரு கடைக்கு இரண்டு அல்லது மூன்று வீதம் வந்து செல்லும். ஒரு நாளைக்கு 300 முதல் 400 வண்டிகள் வரை ஒரு பகுதிக்கு வந்துபோகும். காளை மாடுகளின் இந்த உழைப்பால் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கொங்கு நாட்டின் நாட்டு மாடுகளின் பயன்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்!
(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)
பட்டாளத்து மாப்பிள்ளை!
சூடினேன் பிறை சூடியை
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!
காங்கேயம் காளைகளின் கம்பீரம்.. நாட்டு மாட்டுப் பால்.. கொங்கு நாட்டின் பெருமைகள்!
இதயம் நுழைந்து சிறு சிறு தூறலாக மடல் நிறைந்து வழிந்தோடி!
செல்ல இடியுடன் வா!
கண்ணன் சிரிக்கிறான்!
Nothing destroys you faster than your own mind
படிக்கப்படாத என் கடிதம்!
{{comments.comment}}