கண்ணன் சிரிக்கிறான்!

Oct 24, 2026,12:47 PM IST
- கவிஞர் பா. பானுமதி

மாயா, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவிலில் நடைபெறும் கிருஷ்ணனின் லீலைகள் என்ற உபன்யாசத்தை கேட்க கோவிலுக்கு சென்றாள் தன்னுடைய தோழியுடன் .

வெண்ணை திருடி விளையாடிய கண்ணனை பக்கத்து வீட்டார், எதிர் வீட்டார், அடுத்த தெருவில் வசிப்பவர் என அனைவரும் யசோதையிடம் வந்து புகார் அளிக்க யசோதையோ அவர்களை சமாதானப்படுத்தி கண்ணனை திட்டி தீர்க்கிறாள்.

கண்ணனின் ஒவ்வொரு சேட்டையும் யசோதை ரசிக்காமல் அவனை கோபிப்பதும் சத்தம் போடுவதும் வருத்தப்படுவதும் உணர்ச்சிகரமாக உபாசகர் சித்தரிப்பதும் வீட்டுக்கு வரும் வழியில் மாயா தன் தோழியிடம் புலம்பி தீர்த்து விட்டாள்.





என்ன பெண் இந்த யசோதை. அழகு கண்ணனின் அற்புத லீலைகளை ரசிக்காமல் அந்த பருவத்தை புரிந்து கொள்ளாமல் இப்படி இருக்கிறாளே என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்கு வந்தாள்

வீட்டுக்கு வந்தால் தன்னுடைய 3 வயது மகன் மணிவண்ணன் மாடிப்படி முழுவதும் பூசையறை பொருட்களைக் கொண்டு நிரப்பி இருந்தான். பூஜை அறைக்கு சென்று பார்த்தால் அங்கு வெங்காயம் தக்காளி கத்தரிக்காய் என்று சமையலறை பொருட்கள் நிரம்பி வழிந்தன மாயாவிற்கு தலை சுற்றியது. 

அப்படியே சமையலறைக்குச் சென்று பார்த்தால் பொடி கொட்டி கிடக்க வரவேற்பு அறையில் தண்ணீர் பாட்டில் சாய்ந்திருக்க, தன் மகனை வசைப்பாடியே பக்கத்து வீட்டிற்கு ஓடியவனை முதுகில் இரண்டு அடி அடிக்க ஓடினாள்.


சின்னக் கண்ணன் சிரிக்கிறான்!

(கவிஞர் பா. பானுமதி ஆசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், சொற்பொழிவாளர்) 
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்